கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று ரம்புக்கனையில்

வடக்கின் அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை இன்றும் நாளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நான்கு இடங்களில் ஆரம்பித்துவைக்கபடவுள்ளது.

வடக்கில் அதிவேகப் பாதை நிர்மாணிக்கப்படுவதால் கொழும்பிலிருந்து கண்டிக்கும், தம்புள்ளைக்கும் ஒன்றரை மணித்தியாலத்தில் செல்லலாமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 500 பில்லியன் ரூபா செலவில் இது நிர்மாணிக்க ப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான அடிக்கல் ரம்புக்கன, கலகெதர, கலேவல மற்றும் குருணாகலை ஆகிய நான்கு வெவ்வேறு இடங்களில் இடம்பெறும்.

‘செங்கட தொரட்டுவ’ என்னும் கண்டி அதிவேகப் பாதைக்கான அடிக்கல்லை ஜனாதிபதியவர்கள் இன்று காலை 09.30 மணிக்கு கலகெதரவிலும் 11.30 மணிக்கு ரம்புக்கனையிலும் நாட்டி வைப்பார். இதேவேளை ‘சிலுமினி தொரட்டுவ’ எனப்படும் வடக்கு அதிவேக பாதைக்கான அடிக்கல்லும் அன்றையதினமே மாலை 2.30 மணிக்கு கலேவெல பிரதேசத்தில் ஜனாதிபதியவர்களால் நட்டு வைக்கப்படும் அதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு அதன் தொடர்ச்சியாக கட்டுவனவில் அடிக்கல் நடப்படும். அன்றைய தினமே மாளிகாபிட்டியவில் ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டமொன்றை நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.

உள்ளூர் ஒப்பந்தக்காரர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் முதலாவது அதிவேகப் பாதை இதுவாகும். முழுத் தூரத்தில் 60 வீதத்தை உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் நிர்மாணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாதை நிர்மாணிப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேறப் பிரார்த்தித்து மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

இந்த அதிவேகப் பாதையில் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கலாம்.

முதல் கட்டம் 42-45 மாதங்களுக்குள் பூர்த்தி பெறுமென்று பெருந்தெருக்கள், துறைமுக, கப்பற்துறை அமைச்சின் செயலர் ரன்ஜித் பிரேமசிரி தெரிவித்தார்.

37462a1f9f9096624fd0a0f781981d22_L

රජය මඟින් ඉදිකිරීමට නියමිත උතුරු අධිවේගී මාර්ගයේ මහනුවර කොළඹ කොටස ඉදිකිරීමේ ආරම්භක උත්සවය අද (14) පෙ.ව. 9.30ට ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මැතිතුමාගේ ප්‍රධානත්වයෙන් මහනුවර ගලගෙදරදී පැවැත්වීමට නියමිතය.

ගලගෙදරදී පැවැත්වෙන මෙම ප්‍රධාන උත්සවයට අමතරව අධිවේගී මාර්ගය දිවෙන තවත් ප්‍රධාන දිස්ත්‍රික්ක තුනක තෝරාගත් ස්ථාන තුනකදී ද අධිවේගී මාර්ගයේ කටයුතු ආරම්භ කිරීමට නියමිතය. ඒ අනුව කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ‍කුරුණෑගල නගරය ආසන්නයේත්, මාතලේ දිස්ත්‍රික්කයේ ගලේවෙල ප්‍රදේශයේදීත් කෑගල්ල දිස්ත්‍රික්කයේ රඹුක්කන ප්‍රදේශයේදීත් මෙම උත්සව පැවැත්වෙනු ඇත.

එකම කොන්ත්‍රාත්කරුවෙක් යටතේ මාර්ගය ඉදිකිරීමේදී ඇති වන ප්‍රමාදය වැලැක්වීමට ආයතන හතරක් මඟින් ස්ථාන හතරකින් මෙම මාර්ගයේ ඉදිකිරීම් ඉටුකරවා ගැනීමට කටයුතු යොදා ඇත.

The first phase of construction work of expressway to the North will commence in Galewela, Galagedara, Rambukkana and Kurunegala next week. The foundation stones will be laid at Senkada interchange, Rambukkana and Galewela interchange today (14) and tomorrow (15) at the Kurunegala “Abiman” interchange, the Project Minister of Highways, Ports and Shipping Nirmala Kotelawala said.

The 300-kilometer long highway will be constructed under four stages and the first stage of the project from Enderamulla to Ambepussa is expected to cost US$ 1 billion and it would be completed with Chinese assistance. The 52.8 km Enderamulla-Ambespussa stretch will have five interchanges, 50 overpasses and 30 underpasses.

The Outer Colombo Circular Road, constructed from Enderamulla will connect the Northern Expressway to Dambulla covering the main towns of Meerigama, Pothuhera, Kurunegala, Melsiripura and Galewela, under the first phase.

When the Northern Expressway is constructed, Kandy – Colombo and Colombo – Dambulla travel will take only one and half hours, according to the Minister.

The four lane expressway will be built at a cost of approximately US$ 4.5 billion and is scheduled to be completed by 2018.

73e7b6171e83b35e57f44017edca6275_L-296x300-1415938998565 37462a1f9f9096624fd0a0f781981d22_L-1415938978917

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *