கத்தார் வாழ் கிரிங்கதெனிய ஜமாத்தினரின் ஏற்பாட்டில் மாபெறும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

கத்தார் வாழ் மாவனல்லை கிரிங்கதெனிய ஜமாத்தினரின் அமைப்பான Kiringadeniya Jamath Circle (KJC) QATAR கடந்த இரண்டு (2) வருட காலமாக தமது அங்கத்தவர்களின் நலன் கருதியும் கிருங்கதெனிய ஐமாத்தின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் KJC Qatar அமைப்பின் வெற்றிகரமான 2வது வருட நிறைவைமுன்னிட்டு தமது அங்கத்தவர்களிற்கிடையான உறவுப்பாலத்தை மெம்மேலும் பலப்படுத்தும் முகமாகவ இவ்வருடம் November மாதம் 3ஆம் திகதி மாபெறும் கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை KJC QATAR அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

KJC CRICKET BATTLE 2017 என்று பெயர் தாங்கி இப்போட்டித்தொடர் QATAR ASIAN TOWN WEST END PARK சர்வதேச கிரிக்கட் அரங்கில் காலை 6 மணி தொடக்கம் நடைபெற இருக்கின்றது. சுமார் 120 KJC Qatar அங்கத்தவர்களை பிரதிநிதிப்படுத்தும் 6 அணிகள் இப்போட்டியில் மோத இருக்கின்றன. அணிகளாவன, RED SIDE, BADURIYANS, LEXUS, UNITED, MENCHESTER UNITED மற்றும் LUCKY BOYS.

அத்தோடு இந்நிகழ்வுக்கு ஒத்ததாக அன்றைய தினம் மாலை 2.00 மணிக்கு மாவனல்லை பதுரியா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்களுக்கும் இடையிலான ஓர் நல்லிணக்க கிரிக்கட் போட்டியையும் KJC அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளமை கத்தார் வாழ் மாவனல்லை மக்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் KJC QATAR ஏற்பாட்டுக் குழுவினர் அன்பாக அழைப்பு விடுக்கின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares