கபீர் காசீம்க்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி ?

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவி உட்பட முக்கிய பதவிகள் பல, விசேட சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 30 வருடங்களின் பின்னர், கட்சியில் புரட்சிகரமான மாற்றமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி, கட்சியின் பிரதித் தலைவர் பதவி மூன்றாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும், தற்போது பிரதித் தலைவராகவுள்ள சஜித் பிரேமதாசவுக்கு மேலதிகமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக உள்ள கபீர் காசீம் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு பிரதித் தலைவர் பதவிவழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இடம்பெறவுள்ளதாகவும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares