கபீர் ஹசீமின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆப்பு !

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், செயலாளர் ஆகிய பதவிகளை அரசியல் ஈடுபடாத, திறமையானவர் இருவருக்கு வழங்குவது குறித்து அந்தக் கட்சிக்குள் கலந்துரையாடப்படுவதாக கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளில் உள்ளவர்களை குறித்த பதவியில் அமர்த்தியுள்ளதால், கட்சியின் இணைப்புப் பணிகள் மந்தமடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.

இதுகுறித்த பேச்சுக்கள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவிக்கு, கபீர் ஹசீம் மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு அகில விராஜ் காரியவசம் ஆகியோர் நியமிக்கப்படுவது குறித்தும் கட்சிக்குள் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இந்த மாற்றங்களுடன் எதிர்காலத்தில் பிரதித் தலைவர் பதவிகள், தலைமைத்துவச் சபை ஆகியவையும் இரத்தாகும் நிலை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தி, தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares