கபீர் ஹசீம்க்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை

12604820_409456425921915_8554208002674050323_o

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் , தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நிதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *