கபீர் ஹஷீம் அவர்களே இது உங்கள் கவனத்துக்கு….

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடபெற்ற கேகாலை மாவட்டம் நெலும்தெனிய ஜும்மா பள்ளிவாயலின் நுழைவாயலில் பூரணப்படுத்தப்படாமையினால் பள்ளிவாயலுக்கு செல்பவர்கள் கடும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பள்ளிவாயலுக்கு முன்னாள் வீதி அபிவிருத்தி பணிகள் பூரணமாக நிறைவு செய்யப்படாததால் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வடிகானுக்கு மேலாக பலகை ஆபத்தான கடவை மூலம் பள்ளிவாயளுக்கு ஊர்மக்கள் செல்கின்றனர்.
நுழைவாயிலில் உள்ள வடிகானை செப்பணிட்டு தரும்படி கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சர் கபீர் அவர்களுக்கு பள்ளிவாயல் நிருவாகம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை அவர் ஊடாக பெருந்தெருக்கள் அமைச்சருக்கு கையளிக்க கடிதம் ஒன்றும் அவரின் செயளாலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கேகாலை மாவட்ட சிரேஷ்ட அமைச்சராக இருக்கும் கபீர் ஹஷீம் தரப்பிலிருந்து இதுவரை இது தொடர்பில் தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படவில்லை என நெலும்தெனிய ஜும்மா பள்ளிவாயலின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
photo_69010 photo_308179 photo_878941

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares