கபீர் ஹஷீம் சிறையில் சந்தித்த அரசியல்வாதி யொருவரின் மகனின் நிலை

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதியொருவரின் மகன், போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், இரண்டாவது தடவையாகவும் சிறைவாசம் அனுபவித்துவருகின்றார் என்று அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரமழான் உற்சவத்தின் போது நான், சிறைச்சாலைக்குச் சென்றிருந்தேன். இந்த மகனை நான் அங்கு கண்டேன். தான் இரண்டாவது தடவையாகவும் சிறைச்சாலைக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவருடைய தந்தையான அரசியல்வாதியிடம் தெரிவித்தேன். அவர் விடுதலையாகி வந்த போது வீட்டில் தாய்க்கு அடித்தார், வீட்டு பொருட்களை திருடி விற்றார். அதன் மூலம் மீண்டும் போதை பாவனையை தொடர்ந்தார். திருந்தும் நிலையில் அவர் இல்லை..

அதனாலேயே இரண்டாவது தடவையாகவும் சிறைக்குச் சென்றிருப்பதாக அவருடைய தந்தை தெரிவித்தார் என்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares