கலவர மேகங்கள்… வெடிக்கப் போவது காத்தான்குடியிலோ, மருதமுனையிலோ அல்ல: கண்டி, அலுத்கம, மாவனல்லையில்

140618010202-sri-lanka-aluthgama-12-horizontal-gallery

இன்று இலங்கை நாட்டின் மூலை முடுக்குகளில் எங்கும் ஒரே பேச்சு.”அப்துல் ராசிக்”கை கைது செய்ய முடியுமென்றால் ஏன் ஞானசாரவை கைது செய்ய முடியாது?? நியாயம் இருக்கிறது.யார் சரி ?யார் பிழை? என்பது எனது இந்த கட்டுரையின் வாதமல்ல.ஆனால் சில விடயங்களை நாம் சிந்தித்தேயாக வேண்டும்.வார்த்தை பிரயோகங்களை சற்று அவதானமாக கையாளவும் வேண்டும்.

1. ஞானசார தேரர்  முதற்கொண்ட குழுவின் தோற்றம் பற்றி நான் சொல்லவே தேவையில்லை.முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் திட்டம் என்பது புரிந்த நமக்கு இன்னொன்று புரியவில்லை.

ஆம் இராணுவமாகட்டும் பொலிஸாகட்டும் நாட்டின் பாதுகாப்பு படையில் இன்னும் பழைய செயலாளரின் ஆதிக்கம் முற்றாக நீங்கவில்லை.இன்னுமே  படையினரில் பலர்  யுத்தத்தை நிறைவு செய்த மகாராஜாவின் விசுவாசிகளே இருக்கின்றனர். யோசித்துப் பாருங்கள் பாதுகாப்பு படையினர் கையில் லைசன்ஸூடன் ஆயுதங்கள் இருக்கின்றன. அங்கிருந்து எப்படியான கட்டளை வந்தாலும் கலவரம் வெடிக்கும்.

இந்த நிலையில் ஞானசார தேரர்  மீது அரசாங்கம் கை வைத்தால், எங்கிருந்து முடிச்சிடப் படும் என்பதை அறிந்தே அரசு மௌனம் காக்கிறது.

2. ஞானசார தேரரின் ஆடையே அவரது பெரும் பலம்.அவரில் அரசு கை வைத்தால் முழு பௌத்த சமுகமும் கிளர்ந்தெழுவார்கள்.அது ஞானத்துக்கோ இனவானதத்திற்கோ ஆதரவாக அல்ல.புத்த சாசனத்திற்கான ஆதரவு. அதனால்தான் அவரை அரசு விட்டு வைத்திருக்கிறது என்பதை நாம்தான் புரிய வேண்டும்.

ஏற்கனவே இந்த அரசு பௌத்தர்களின் சொற்ப வாக்குகளிலேயே ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் அவரில் கை வைத்தால்
இருக்கும் பௌத்தர்களின் ஆதரவும் கை நழுவலாம்.அது பற்றி அரச தரப்பு சிந்திக்கலாம் இல்லையா?

3 உண்மைதான் நல்லாட்சி அமைந்ததே சிறுபான்மை எங்கள் வாக்குகளால் தான். ஆனால் இவர்கள் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்று அரசை கவிழ்த்து இன்னொரு தேர்தலுக்குப் போனால்…..

நிச்சயமாக ஆட்சி எதிரிக்குத்தான் போகும். கப்றுகளை வீட்டிற்குள் தோண்டி வைத்து காத்திருக்க வேண்டியதுதான். முஸ்லிம்கள் மீது அவ்வளவு வெறியுடன் இருக்கிறது சகோதர சமாகம. மேலும் இந்த அரசு எதிர் தரப்பிலிருக்கும் பௌத்த தரப்பு ஆதரவை பெறுவதற்காகவே சிறுபான்மை விடயத்தில் சில மௌனங்களை சாதிக்கிறது .இது ஒரு ராஜதந்திர நகர்வு என்பதை புரிய வேண்டும். நாங்கள் கொஞ்சம் பொறுக்கத்தான் வேண்டும் அடக்கி வாசிக்கத் தான் வேண்டும்.

4 விஜேதாச ராஜபக்ஷவின் பேச்சு,பெப்பிலியான சம்பவம், எல்லாவற்றையும் பார்க்கும் போது ஏதோ ஒரு கலவரத்திற்கான முனைப்பு என்பது புரிகிறது.இதுதான் சாணக்கியமாக நடக்க வேண்டிய தருணம். கழாகத்ர் மீதான உறுதியை உயிர்ப்பித்துக் கொள்ளுங்கள்.ஆத்திரப் பட்டு எதுவும் செய்யலாம்.

எழுத தெரியும் என்று facebookல் எழுதலாம். பேசத் தெரியுமென்று whatsapp ரெகோடிங்கஸ் அனுப்பி இளைஞர்களை தூண்டலாம், சோரம் போவதற்கு முன் அரசியல்வாதிகளின் நகர்வுகளை யோசிப்பது சமயோசிதமானது. கலவரம் என்று வெடிக்கும் போது காத்தான்குடியிலோ, மருதமுனையிலோ, ஏறாவூரிலோ எந்த கலவரமும் வருவதில்லை.

நன்றாக விளங்குங்குகிறதா? பாணதுறை அத்திடிய, கண்டி கல்ஹின்ன, கந்தளாய், ஹொரவபொத்தானை, நீர்கொழும்பு, களுத்துறை அலுத்கம, மாவனல்ல. இப்படியான இடங்கள்தான் அவர்களது இலக்கு சிங்கள கிராமங்களால் சூழப்பட்ட முஸ்லிம் கிராமங்கள். ஏன் அவைதான் இலக்கு வைக்கப்படுகின்றன.?.

அடித்து நாசம் செய்து விட்டு ஓடி ஒளிவதற்காகவா?? இல்லவே இல்லை

முஸ்லிம்கள் நாங்கள் பொலிஸிற்கு போனாலும் அங்கே நமது அதிகாரிகள் இருக்காத இடங்கள் அவை. பெரும்பான்மை ஆட்சிதானே!!

சரி, வெட்டி விட்டான் குத்தி விட்டான் என வைத்தியசாலைக்குப் போனால். minor staff முதல் consultant வரை அத்தனை பேரும் பெரும்பான்மை. வேண்டுமேன்றே தாமதப்படுத்துவார்கள். முதலுதவி கூட செய்ய மாட்டார்கள்.(அலுத்கம கலவரத்தில் அந்த சகோதரரின் கால் முழுமையாக அகற்றப்பட காரணமே வைத்தியர்களின் தாமதமே)

#நம்_வசம்_ஆயுதமும்_இல்லை_போலிஸும்_இல்லை_வைத்திய_வசதியும்_இல்லை

வேகம் மட்டும் இருந்து ஒன்றுமே சாதிக்க முடியாது விவேகம்_வேண்டும்..

ஆர்ப்பாட்டங்களால் இதுவரை சாதித்தது வரலாற்றில் எதுவுமே இல்லை. சமூக தலைமைகளை தூண்டப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம் அமைச்சர்களை, அரசை சீண்டி விடட்டும்.

எம்மிடம் எல்லா பலமும் உடைய #அல்லாஹ் இருக்கிறான் .
துஆவும் தஹஜ்ஜுதும் இருக்கிறது.அங்கிருந்து தீர்வைப் பெற முயற்சி செய்வோம்.

உள்ளங்களை இரு விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டுவிப்பவன், எதிரியின் உள்ளத்தையும் புரட்டிப் போடும் வல்லமை மிக்கவன் எதிரியின் மனதில் பயத்தை, அமைதியை விதைப்பான் நிச்சயம்.

அதை கடந்தும் வெள்ளம் போனால் பார்க்கலாம்.

Fauzuna Binth Izzadeen

You may also like...

1 Response

 1. Mohan says:

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.சிங்களனோடு சேர்ந்து
  எங்களை அழித்தீர்கள்.இன்று நீங்கள்
  எல்லாம் சில காலம் உங்கள் ஆட்டம்
  முடிந்தது.உங்களுக்கும் ஒரு முள்ளிவாய்க்கால் காத்திருக்கிறது.தமிழ் என்ற உணர்வை மறந்து மதத்தின் மீதேறி மக்களை பிரித்தீர்கள்.இன்று கதறல் வேறு.எந்த கடவுளும் வான் விட்டு வந்து மனிதனை காத்ததே இல்லை.
  துரேகத்தால் வாழ்ந்தீர்கள்.இன்று
  காப்பார் இல்லாமல் கதறல். ஒற்றை தலைவனை துரோகத்தால் வீழ்த்தினீர்கள்.இன்று எந்த முஸ்லீம் நாடும் உம்மைக்காக்க வரப்போவதில்லை.பர்மாவிற்க்கு வராதவனா ஈழத்திற்க்கு தப்பு தப்பு கிழக்கிற்க்கு வரப்போகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *