கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றம்

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கு இன்று காலை விஜயம் செய்த கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரியின் பிரதி அதிபர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கல்முனை வலய கல்வி பணிமனையின் திட்டமிடலுக்கு பொறுப்பான  பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரே கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி இன்று விஜயம் குறித்த குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் பதில் அதிபரின் அனுமதியின்றி வகுப்புக்களுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது 10ஆம் ஆண்டிலுள்ள வகுப்பறைக்கு சென்று பாடத்திட்ட புத்தகத்தில் கீறல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

இந்த செயற்பாடு குறித்து ஆசிரியர்கள் குறித்த பிரதி கல்வி பணிப்பாளரிடம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதி கல்வி பணிப்பாளர் கல்லூரி பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளன பிரதி அதிபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(TM)

3

4

23976950

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares