காஸா போரில் இஸ்ரேல் தோற்றது – இஸ்ரேலிய எதிர்கட்சி தலைவர்

ஹமாஸிடம் இஸ்ரேல் தோற்றது – இஸ்ரேலிய எதிர்கட்சி தலைவர்

காஸா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஹமாஸிடம் இஸ்ரேலிய இராணுவம் தோல்வி அடைந்து. அதேவேளை இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது என இஸ்ரேலின் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்;
“காஸா பகுதிகளில் இஸ்ரேல் குடிமக்களின் விவகாரத்தில் அரசு எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை, அடுத்த வாரம் ஃபலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முன்வைக்கும் நிபந்தனைகளையும் இஸ்ரேல் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பலத்தை பயன்படுத்தி மட்டும் போரில் வெற்றிபெற்றுவிடலாம் என்பது தவறானது என குறிப்பிட்டுள்ள அவர், மேற்கு கரை மற்றும் காஸாவோடும் காட்டிவரும் பிரிவினை கொள்கையை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஸா போரில் இஸ்ரேல் இலக்கை அடையவில்லை – இஸ்ரேலின் அமைச்சர்

இஸ்ரேலின் படைப்பலம் பிரமாண்டமானதாக இருந்த போதிலும், தந்திரோபாய ரீதியில் இஸ்ரேல் தனது இலக்கை அடையவில்லை. ஹமாஸுக்கு எதிரான அதன் தாக்குதல்களின் போது அது தனது நோக்கத்தை நிறைவேற்றவில்லை என இஸ்ரேலின் உல்லாசத் துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அந்நாட்டின் பிரபல பத்திரிகையான அஹரநோத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காஸா போரில் ஹமாஸுக்கே வெற்றி – இஸ்ரேல் இராணுவ ஆய்வாளர்

இஸ்ரேல் எதிர்பார்த்தது போன்று காஸா போரில் அது வெற்றி பெறவில்லை. இஸ்ரேலின் இராணுவம் தோல்வியையே சந்தித்தது என இஸ்ரேலின் இராணுவத் துறை ஆய்வாளர் ஒருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

10371658_836497493059339_3639333648237101392_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares