கிரிக்கெட்டில் அதீத திறமைகளை வெளிக்காட்டிவரும் மாவனல்லை இளம் நட்சத்திரம்

மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலையில் தரம் 8ல் (ஆங்கில மொழி மூலம்) கல்வி கற்கும் மாணவன் நௌஷாத் ஆபித் அலி. சிறு வயது முதலே கிரிக்கட் விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தனக்கு கிடைக்கும் நேரமெல்லாம் கிரிக்கட் விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்டவர்.
இவரின் ஆர்வம் கண்ட இவரின் பெற்றோர்கள் இவரின் முயற்சிக்கு பக்கபலமாக இருந்து தங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்கின்றனர்.
கடினப் பந்து (Hard Ball) வலது கை வேகப்பந்து வீச்சாளராக ஜொளிக்கும் ஆபித் அலி பாடசாலை மட்ட போட்டிகளிலும் தனது வயதிற்குட்பட்ட கழக மட்ட போட்டிகளிலும் விக்கட்டுக்களை அள்ளி எடுப்பதில் தனிக்காட்டு ராஜாவாக இவர் காணப்படுகிறார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஆபித் அலின் தந்தை நௌஷாத் தனது மகனின் கனவை நிறைவேற்ற கடும் போராட்டத்தை மேற்கொள்கிறார்.
கிரிக்கெட்டில் இலங்கை அணியின் லசித் மலிங்க, நுவான் குலசேகர போன்றோரை தனது முன் மாதிரியாகக் கொண்டுள்ள ஆபித் அலி எதிர்காலத்தில் இலங்கை தேசிய அணியில் இடம் பிடிப்பதே தனது இலட்சியம் என்று கூறுகிறார்.
தனது கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்திக் கொள்ள ஆபித் அலி கண்டி நகரில் புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளவும் பெரும் பிரயத்தனம் செய்கிறார்.
எமது சமூகத்தில் இப்படியான வீரர்கள் உருவாகுவது மிக மிக அரிதான ஒன்ராக இருக்கும் நிலையில் இவ்வீரனுக்கு எம்மாலான ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி இவரின் எதிர்கால இலட்சியம் நிறைவேற துணை நிற்போமாக.
தொடர்புகளுக்கு:-
தந்தை. A.H.M.நௌஷாத்.
424/8, கண்டி வீதி,
மாவனல்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *