கிரிங்கதெனிய வாழ் மக்களுக்கு ஒரு சிறந்த சூழலை உருவாக்குவோம்

 

கிரிங்கதெனிய பிரதேசத்தில் அன்றாடம் சேறும் குப்பைகளை தெருவோரங்களில் வீசுவதால் கிரிங்கதெனிய பிரதேசத்தை ஊர்வாசிகளே அசுத்தப்படுத்துகின்றனர்.

இந்த குப்பை பிரச்சினைக்கு தீர்வாக மாவனல்லை பிரதேச சபை மற்றும் மாவனல்லை பொது சுகாதார நிலையம் மற்றும் கிரிங்கதெனிய மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல் இணைந்து திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதாவது குப்பைகளை குப்பை தொட்டிகளில் மாத்திரம் போடா வேண்டும் என்பது. இதனால் கிரிங்கதெனிய பிரதேசத்தை மனங்கவர்க் கூடிய ஒரு சூழலை உருவாக்க முடியும்.

ஆனால் இதற்ககு ஊர்வாசிகள் அனைவரினதும் ஆதரவைப் பெற்றால் மாத்திரமே இந்த திட்டம் வெற்றியளிக்கும். எனவே இதற்கு புரண ஒத்துழைப்பை வழங்குமாறு கிரிங்கதெனிய வாலிபர் சங்கம் வேண்டிக்கொள்கின்றது.

இந்த திட்டத்திற்கு மாவனல்லை பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares