குர்­ஆனை தடை செய்­யும்­படி BBS கோருவதை முஸ்லிம்கள் இதனை அலட்டிக் கொள்ள வேண்டுமா?

 

இந்­நாடு தேசிய இன ஐக்­கி­யத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்­டி­ருக்கும் இச் சந்­தர்ப்­பத்தில் புனித அல் குர்­ஆனைத் தடை செய்­யும்­படி கோரு­வது இந்­நாட்டை மீண்டும் குழப்ப நிலைக்குள் தள்ளி விடு­வ­தற்­கான முயற்­சியின் வெளிப்­பா­டாகும்.Untitled-433

ஆனால் இம் முயற்சி ஒரு போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம். எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

இந்­நாட்டில் வாழும் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் ஆகிய மதங்­களைச் சேர்ந்த மக்கள் தம் சமூக இன அடை­யா­ளங்­க­ளுக்கு மேல­தி­க­மாக தேசிய அடை­யா­ளத்தை நோக்கி இன்று நெருங்கி வந்து கொண்­டி­ருக்­கின்­றனர்.

இதனைக் குழப்­பி­ய­டிக்கும் முயற்­சி­யா­கவே இக்­கோ­ரிக்­கையை நோக்க வேண்­டி­யுள்­ளது. ஆனால் நாட்டின் நலன்­களில் அக்­கறை கொண்ட சக­லரும் இக்­கோ­ரிக்­கைக்கு கடு­க­ள­வேனும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் நேற்று முன்தினம் நடாத்­திய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தைப் பாது­காப்­ப­தற்கு குர்ஆன் தடை செய்­யப்­பட வேண்டும் என்று தெரி­வித்­தி­ருப்­ப­தற்கு ஆட்­சே­பனை தெரி­வித்து விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே முன்னாள் எம். பி. ஸுஹைர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது, நாட்டில் அச்சம், பீதி­யின்றி சுதந்­தி­ர­மா­கவும், நிம்­ம­தி­யா­கவும் வாழக் கூடிய சூழல் ஜன­வரி 08 ஆம் திக­தியின் பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்டுள்ளது.

இந்த நிம்­ம­தி­யையும் நாட்­டையும் குழப்பும் நோக்­கி­லேயே இக்­கோ­ரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்­பதில் ஐய­மில்லை.

கடந்த 1400 வரு­டங்­க­ளுக்கும் மேலாக உலகில் அமைதி சமா­தா­னத்தை வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்கும் புனித அல் குர்­ஆனை தடை செய்யக் கோரு­வது அடி­மட்ட முட்­டாள்­த­ன­மாகும். உல­க­றிந்த பேர­றி­ஞ­ரான மைக்கல் எச். ஹார்ட் உலகில் தோன்­றிய அதி­சி­றந்த நூறு தலை­வர்­களைத்  தேர்ந்­தெ­டுத்து “த ஹன்ரட்“ என்ற நூலை எழுதி வெளி­யிட்­டுள்ளார்.

இவர் மேற்­கத்­தைய சமூ­கத்தைச் சேர்ந்த முஸ்லிம் அல்­லாத ஒருவர்.. அப்­ப­டி­யி­ருந்தும் அந்­நூலில் அவர் முஹம்மத் (ஸல்) அவர்­க­ளுக்கு முத­லிடம் வழங்­கி­யுள்ளார். அதற்கு அவர் குறிப்­பிட்டு இருக்கும் கார­ணங்­களில் ஒன்­றாக முஹம்மத் (ஸல்) அவர்கள் புனித அல் குர்­ஆனின் பிர­தி­ப­லிப்­பாக விளங்­கி­யது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

முழு மனித சமூ­கத்­தி­னதும் இம்மை மறுமை வாழ்வின் விமோ­ச­னத்­திற்கும் சுபீட்­சத்­திற்கும் நேர்­வழி காட்டக் கூடிய அல் குர்­ஆனைத் தடை செய்யக் கோரு­வது புத்­தி­பே­த­லித்­த­த­ன­மே­யாகும்.

அதே­நேரம் இக்­க­ருத்தின் ஊடாக அவர் தம் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார்.

அதனால் இவரது கருத்து குறித்து எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. கடந்த பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த இவர் பௌத்த மக்களாலேயே முழுமையாக நிராகரிக்கப்பட்டவராவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர்-

You may also like...

1 Response

  1. faz says:

    உண்மை தான் அலட்டிக்கொள்ள தேவை இல்லை துஆ மட்டும் செய்வோமா அதையும் அலட்ட தேவை இல்லை என நினைக்கேறேன். (அப சரனை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *