குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் புதிய தலைவராக மாவனல்லை பௌஸ் மௌலவி தெரிவு

Court

குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் புதிய தலைவராக மாவனல்லை வலய குவாஸி நீதிபதி அஷ்ஷெய்க் ஏ.எல்.ஏ.எம்.பௌஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மருதானையில் அண்மையில் நடைபெற்ற குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் பொதுக் கூட்டத்தின் போதே அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது குவாஸி நீதிபதிகள் மன்றத்தின் உப தலைவர்களாக டாக்டர். ஐ.எம்.செரீப் மற்றும் எம்.வை.எம்.இப்ஹாம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுச் செயலாளராக சட்டத்தரணி ஹஸைன் அஸ்ஹர் சைனூன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட பௌஸ் உரையாற்றும் போது,

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தை அமுல் நடத்தும் குவாஸி நீதிபதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் நலன்களைக் கவனிப்பதற்கும் ஸ்ரீலங்கா குவாஸி நீதிபதிகளின் மன்றம் மும்முரமாக செயற்படும்.

குவாஸி நீதிபதிகள் அரசிடமிருந்து குறைவான கொடுப்பணவுகளைப் பெற்றுக் கொண்டு சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளை செய்து வருகிறார்கள். இவர்களது கொடுப்பணவுகள் மற்றும் உரிமைகளுக்காக மன்றம் அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

-நஸீஹா ஹஸன்-

13679882_188643888216896_989226882673324466_o 13920246_188644598216825_3595579431414479019_o

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *