கேகாலையில் மண்சரிவு ஏற்ப்பட்டது முதற் தடவையல்ல – டாக்டர் கமகே

கேகாலையில் மண்சரிவு ஏற்ப்பட்டது முதற் தடவையல்ல எனவும் 28 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான பாரிய அழிவு ஒன்று ஏற்ப்பட்டதாகவும், பேராதனை பல்கலைக்கழக விசேட குழந்தை மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆரியசேன யூ. கமகே தெரிவித்துள்ளார்.

மாவனல்லையை வசிப்பிடமாகக் கொண்ட டாக்டர் ஆரியசேன யூ. கமகே தனது பேஸ் புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

1989 ஜூன் மூன்றாம் திகதி கலிகமுவ, ருவன்வெல்ல, கேகாலை, வரகாப்பொல, தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் 40 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

300 மரணங்கள் நிகழ்ந்தன. 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 12000 பேர் அகதிகளானார்கள்.
நெட்டியாபனையில் மிகப் பெரிய மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டது. எல்லாம் நிகழ்ந்து இற்றைக்கு 28 வருடங்களாச்சு… என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13230096_10208260187494368_4187518132593876366_n 13238913_10208260185654322_2989947472124179916_n 13241130_10208260184694298_692319329437469251_n 13260105_10208260184494293_1545217050594588711_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *