கேகாலை கன்னத்தோட்டை சுலைமானியா முஸ்லிம் பாடசாலை வளவில் நிறுவப்படும் பாலர் பாடசாலை நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி இன்று (15) மாலை பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
புதிய கல்வித் திட்டத்துக்கு அமைவாக,கல்வி அமைச்சின் அனுமதியோடும் அங்கீகாரத்தோடுமே இக்கட்டடப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குவைட் நிதியுதவியின் மூலமே பாலர் பாடசாலைக்கான இக்கட்டடம் நிறுவப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.