கேகாலை நகரில் இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகளை முன்னிட்டு இன்றும்(03) நாளையும்(04) விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11.30 வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை நகரை அண்மித்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, பார ஊர்திகள், பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் என 3 பிரிவின் கீழ், மாற்று வீதிகளின் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் கொள்கலன் ஊர்திகள், எரிப்பொருள் கொள்கலன்கள் மற்றும் பொருட்களை ஏற்றி செல்லும் லொறிகள், இன்றும் நாளையும் அதிகாலை நான்கு மணி முதல் அம்பேபுஸ்ஸ சந்தி ஊடாக கண்டி நோக்கி பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேபோன்று, கொழும்பு நோக்கி பயணிக்கும் அவ்வாறான வாகனங்கள் கட்டுகஸ்தொட்டை, குருநாகல் ஊடாக கொழும்பை நோக்கி பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

1655950_611243848947269_596286483_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *