கேகாலை நகரைத் தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்தவும்- பொலிஸ்

கேகாலை நகரை அண்மித்த பல வீதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால் கொழும்பு – கண்டி வீதியின் கேகாலை நகரை அண்மித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்துவோர் கேகாலை நகரைத் தவிர்த்து மாற்று வீதிகளைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குருநாகல் நகரினூடாக அம்பேபுஸ்ஸ வீதியை மாற்று வீதியாகப் பயன்படுத்த முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares