கேகாலை மாவட்டத்தில் எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெற இடமளிக்க மாட்டோம் – கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகரி

மாவனல்லை நகரில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாவனல்லை மற்றும் மாவனல்லையை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள வியாபாரிகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வொன்று நேற்று (24) பகல் 3.00 மணிக்கு மாவனல்லை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகரி பியல் தசநாயக்க அவர்கள்;

கேகாலை மாவட்டத்தில் அல்லது மாவனல்லை நகரிலோ எந்தவிதமான அசம்பாவிதங்கள் நடைபெற இடமளிக்க மாட்டோம் மேலும் அவ்வாறு எதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுத்த முற்பட்டால் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் எனவும் குறுப்பிட்டார்.

இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பேராதனை பல்கலைகழக பேராசிரியர் ஏ.எம் நவரத்ன பண்டார அவர்கள் பிரதான உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கலபட கோரலையே தேரர்கள் சங்கத்தினர் உட்பட அணைத்து மத தலைவர்களின் வருகையுடன் கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகரி, மாவனல்லை பொலிஸ் அதிகாரி, மாவனல்லை பிரதேச செயலாளர் மற்றும் மாவனல்லை பிரதேச சபை தலைவர் உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் மாவனல்லை மற்றும் மாவனல்லையை சூழவுள்ள பிரதேசங்களில் உள்ள சும்மார் 250 பௌத்த முஸ்லிம் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

download (20)

download (18)

10408526_665729803505302_1412728436973029699_n

10487171_665729800171969_6958939286186755616_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *