கேகாலை- மாவனெல்ல, கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிபில்

கேகாலை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேரக்கணிப்பாளர் ஒருவர் பஸ் ஊழியரை தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே இந்த பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை- கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேகாலை- மாவனெல்ல தனியார் பஸ் ஊழியர்களும் பணி பகிஷ்கரிப்பில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகபர் கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *