கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி இன்றுதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. இலங்கையின் இரண்டாவது அதிவேக வீதியான இந்த வீதியை நிர்மாணிப்பதற்காக சுமார் 45 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புதிய களனி பாலமருகிலுள்ள நுழைவு நிலையத்திற்கு அருகே இன்று முற்பகல்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ புதிய அதிவேக வீதியை மக்களிடம் கையளித்தார். வீதி திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தமது காரை ஜாஎல நுழைவாயில் வரை செலுத்தி வாகன போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தார்.

2009 ஆம் ஆண்டு சீன நிறுவனங்கள் சிலவற்றின் தலைமையில் இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிக்ள ஆரம்பித்து வைக்கப்பட்டன. கடல் மணல் நிரப்பப்பட்டு இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது அதிவேக வீதி இதுவாகும். சீதூவ நடவடிக்கை நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் கட்டுநாயக்க நுழைவாயிலை நோக்கி பயணத்தை தொடர்ந்தார். கட்டுநாயக்க நுழைவாயில் அருகே ஜனாதிபதியை பாடசாலை மாணவ மாணவியர் வரவேற்றனர். அதிவேக வீதி  திறப்பு விழா வைபவம் ஜாஎல விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி திறந்து வைக்கப்பட்டதை குறிக்கும் வகையில் முத்திரையொன்றும் முதல்நாள் தபால் உறையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 30 வருடகாலமாக நிலவிய அசாதாரண சூழ்நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விசேட அதிதிகளுக்கான வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த விசேட அதிதிகளின் வளாகத்தை புனர்நிர்மாணிக்க 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1378802_10151641541741467_1627445597_n

397504_10151641551491467_971505325_n

1377034_10151641547376467_1366655064_n

1385385_10151641547206467_1422193985_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *