கோமரங்கடவெல பிரதேசத்தில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் 20 நிரந்தரவீடுகள் கையளிப்பு

வறிய குடும்பங்களுக்கு 20 நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வூ, கோமரங்கரவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புளிக்கண்டிக்குளம் கிராமத்தில் 28ம் திகதி ஒக்டோபர் காலை 10 மணிக்கு நடைபெற்றது. பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரல் டீ.டீ.கே. டி சில்வா பங்கேற்றார். விசேட அதிதிகளாக கோமரங்கடவெல பிரதான பௌத்தகுரு சுமணதேரர், பிரதேச செயலர் ருவான் ஜயசுந்தர, முஸ்லிம் எய்ட் நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர்  பாஹிம் வகாப் அவர் களுடன், சமூகத்தலைவர் கள், பயனாளிகள், கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட கோமரங்கடவெல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புளிகண்டிக்குளம், மயிலவெவ ஆகிய கிராமங்கள் 1985ம் ஆண்டு தொடக்கம் மிகவூம் மோசமாக பாதிக்கப்பட்ட வறிய கிராமங்களாகும். அனேகமான குடும்பங்கள் அநுராதபுரம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று 2009ம் ஆண்டு யூத்தம் முடிவூற்றதைத் தொடர்ந்து தமது சொந்த கிராமங்களுக்கு மீள்குடியேறின. இருந்தபோதிலும்இ கடந்த இரு தசாபத் இடைவெளியில் இவர்களின் வதிவிடங்களும் வாழ்வாதாரங்களும் யூத்தத்தினாலும் காட்டு விலங்குகளாலும் அழிக்கப்பட்டிருந்தன.

இக்குடும்பங்களின் பாதிப்புநிலையை கவனத்தில் எடுத்த ‘முஸ்லிம் எய்ட்’ திருகோணமலை அரச அதிபரின் ஆலோசனைகளைப் பெற்று மிகவூம் கஸ்டத்திலிருந்த 20 குடும்பங்களைத் தேர் ந்தெடுத்து அவர் களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்க முன்வந்தது.

மேற்படி வீட்டுத்திட்டமானது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யூத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 125 நிரந்தர வீடுகளை அமைக்கும் ‘முஸ்லிம் எய்ட்’ இன் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares