க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களுக்கு தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்கள், மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார கூறினார்.

கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், பகிர்ந்தளித்தல், மாதிரி பத்திரங்களை வழங்குவதாக சுவரொட்டி, பதாகைகளை காட்சிப்படுத்தல், மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன இந்தக் காலப்பகுதியில் தடைசெய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, பொலிஸ் தலைமையகத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *