சப்ரகமுவ மாகான முதலமைச்சரும் குடும்ப சகிதம் நாட்டை விட்டு வெளியேறினர்.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தனது குடும்பம் சகிதம் இன்று காலை நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது குடும்பத்திலுள்ள 6 பேர் இவ்வாறு சென்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தும் தந்தையுடன் சென்றுள்ளார்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.225 எனும் இலக்கத்தையுடைய விமானத்தில் டுபாய் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் விமான நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *