சர்வதேச இளங் கண்டுபிடிப்பாளர் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா மாணவனுக்கு தங்கப்பதக்கம்

செப்டம்பர் மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இடம்
பெற்ற நான்காவது சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் ((4th International Young
Inventors Award) இலங்கை சார்பாக கலந்து கொண்ட எழுவர் கொண்ட குழுவில் அங்கம் வகித்த மாவனல்லை ஸாஹிரா
கல்லுரி மாணவன் எம்.இஸட்.எம். அய்யாஷ் தனது புதிய கண்டுபிடிப்பான Energy Saving Cooking Pot எனும் ஆக்கதிற்கு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஸாஹிராவின் 95 வருடகால வரலாற்றில் முதன் முறையாக சர்வதேச போட்டி நிகழ்ச்சியொன்றில் தனி
மாணவர் ஒருவர் பங்குபற்றி தங்கப்பதக்ம் வென்றது இதுவே முதல் தடவை.

13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் Energy
Conservation பிரிவில் இவரது ஆக்கத்திற்கு தங்கப் பதக்கம் கிடைக்கப்பெற்றது. சமைக்கும் போது
பாத்திரத்தில் இருந்து வெப்பமும் நீராவியூம் வெளியேறிச் செல்வதால் கணிசமான அளவூ சத்தி விரயமாக்கப்படுகிறது.

இச்சத்தி விரயத்தை குறைக்கு முகமாக புதிய வடிவமைப்பிலான மூடியொன்றை கண்டுபிடித்துள்ளார் எம்.இஸட்.எம். அய்யாஷ். இம்மூடியைக் கொண்டு பாத்திரம் மூடப்படுகையில் வெளியேறும் நீராவி சிறைப்படுத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வெப்ப சத்தி மீண்டும் பாத்திரத்திற்கு வழங்கப்படுவதுடன் சூழலிற்கு இழக்கும் வெப்பத்தின் அளவூம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த எரிவாயூவைக் கொண்டு சமையலை மேற்கொள்ளலாம்.

இத்துறையில் இவரது முதல் முயற்சி 2013ம் ஆண்டு தரம் 06ல் கல்வி கற்கும் போது இடம் பெற்றது.
2013ம் ஆண்டு இலங்கை விஞ்ஞான முன்னேற்றக் கழகத்தினால் ((SLAAS) களனி பல்கலைக்கழகத்தில் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் Super Duster எனும் துசியை உறிஞ்சும் கரும்பலகைத் துடைப்பானை கண்பிடித்தமைக்காக தேசிய மட்ட போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை பெற்றதுடன் இத்துறைக்கான அவரது பிரவேசம் ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற தேசிய மட்ட போட்டியில் தனது புதிய கண்டுபிடிப்பான தரையிலிருந்து பீலிகளைத் துப்புரவூ செய்யூம் புரவவநச Gutter Cleaner எனும் கருவிக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

2015ம் ஆண்டு இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேசிய மட்ட போட்டிய்ல் Smart Mechanical Arm எனும் கருவிக்கு வெள்ளிப்பதக்கதம் வழங்கப்பட்டதுடன் அதே ஆண்டு Gas Indicator எனும் Gas Cylinder வாயூவின் அளவைக் கண்டுபிடிக்கும் கருவிக்கு SLAAS நிறவனம் தேசிய ரீதியிலான போட்டியில் வெண்கலகப்பதக்கத்தையூம் வழங்கியது.

அதே ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவூம்ரூபவ் ஒஸ்டன் நிறுவனமும் இணைந்து தேசிய
மட்டத்தில் மேற்கொண்ட சுழடிழவ தொடர்பான 06 மாத கால பயிற்சி நெறிக்கு அய்யாஷ் தெரிவூ
செய்யப்பட்டதுடன் கற்கை நெறியின் இறுதியில் இடம் பெற்ற தேசிய மட்ட Robot Designing and
Programing போட்டி நிகழ்ச்சியில் National Level Junior Championஆக தெரிவூ செய்யப்பட்டு
பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சி 2015.11.22ம் திகதி ITN தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

2016ம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவனால் மேற்கொள்ளப்பட்ட புதிய கண்டு பிடிப்பாளர் போட்டி நிகழ்சியில் Nut Cracker எனும் நிலக்கடலை உடைத்து வேறுபடுத்தும் இயந்திரத்திற்கு மாகாண மட்டத்தில் 1ம் இடமும் SLAAS நிறுவனத்தினால் அதே ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய மட்ட போட்டியில் Merit சான்றிதழும் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.

2017ம் ஆண்டு Innovaminds – 2017 போட்டியில் தேசிய ரீதியல் விண்ணப்பித்திருந்த போட்டியாளரில் இருந்து சிறந்த 21 கண்டு பிடிப்புகள் தெரிவூ செய்யப்பட்டன. இக்கண்டுபிடிப்புகளில் இருந்து மிகச்சிறந்த 7
கண்டுபிடிப்புகள் தெரிவூ செய்யப்பட்டன. அவ்வாறு தெரிவூ செய்யப்பட்ட 7 கண்டு பிடிப்புகளில் அய்யாஷின்
புதிய கண்டுபிடிப்பான Energy Saving Cooking Pot இடம்பெற்றது.

எதிர்காலத்தில் பொறியியல் துறையில் நிபுணத்துவம் பெற்று அத்துறையில் புதிய பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் பேராவலுடன் தனது கல்வியை தொடர்கிறார் இளம் கண்டுபிடிப்பாளர்
எம்.இஸட்.எம். அய்யாஷ்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares