சாஹிரா கல்லூரி மாணவர்களின் முன்மாதிரி, முழு முஸ்லிம்களுக்குமே பெருமை

மாவனல்லை சாஹிரா கல்லூரியில் உயர் தரம் கற்கும் மாணவர்களான மொஹமட் இக்பால் இன்சிமாம் மற்றும் எம். எ அகீல் மொஹமட் ஆகியோர் முறையே ஹெம்மாதுகம வாடியத்தன்ன மற்றும் கடுகஹவாத்த தெவனகல பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள்.download (15)

இவர்கள் இருவரும் கண்டிக்கு மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் போது கண்டி பஸ் நிலையத்தில் பொதி ஒன்று விழுந்திருந்ததை கண்டுள்ளனர். அப்பொதியை எடுத்து பார்த்தபொது அப்பையில் 25000 ரூபாய் பணம் இருந்ததை கண்டுள்ளனர். உடனே இந்த மாணவர்கள் இருவரும் அப்பணப் பொதியை கண்டி பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைத்து அந்த பணத்தை உரியவருக்கு வழங்கும்படியும் கூறியுள்ளனர். இந்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்தது ஒரு சிறந்த முன்மாதிரி என கண்டி- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி காமினி அலேபோல அவர்கள் குறிப்பிட்டனர்.

மொஹமட் இக்பால் இன்சிமாம் மற்றும் எம். எ அகீல் மொஹமட் இருவரினதும் இந்த செயற்பாடு முழு பாடசாலைக்கும், மாணவர்களுக்கும்  சிறந்த ஒரு முன்மாதிரி எனவும் இவர்களின் முன்மாதிரியை பாராட்டும் வகையில் அவரிகளுக்கு சான்றிதழ் ஒன்றை வழங்க ஏற்பாடு செய்வதாக கண்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் அதிகாரி எச். எஸ் எதிரிசிங்க அவர்கள்  குறிப்பிட்டார்.

DSC00336 [1600x1200]

You may also like...

3 Responses

  1. FAWZAN35 says:

    Jazakallahu Hyrn to u both and your parents !Weldon

  2. arshad says:

    masha allah

  3. nawaz says:

    nalla muslim pillaigalai samoogathukku kodukkum nalla umma ,wappa ellarukkum allah suwarkathai koduppanaga…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *