சாஹிரா கல்லூரி முகாமைத்துவம், SDC, OBA இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்

12565489_1058345164187019_307451721203065842_n

எதிர்வரும் 29ம் திகதி நடைபெறுவதாக கூறப்படும் மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதான புணரமைப்பு பணிகளின் போது இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடைபெறவுள்ள கவனயீரப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாவனல்லை சாஹிரா கல்லூரி முகாமைத்துவம், பாடசாலை அபிவிருத்தி கம்மிட்டி மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து வழங்கும் முக்கிய அறிவித்தல்.

பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலர் எம்மிடம் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வினவுகின்றனர். நடைபெற இருப்பதாக கூறப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை பாடசாலை சமூகமாகிய நாம் வன்மையாக எதிர்கின்றோம்.

அதேவேளை நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக எந்த விதமான முதற்கட்ட நடவடிக்கையும் மேட்கொள்ளாது இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதால் பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒரு செயலே அன்றி இதனால் பாடசாலைக்கு எந்த வித நன்மையும் கிடைக்கபோவதில்லை.

எனவே ஏற்பாட்டாளர்களிடம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பாடசாலையின் அபிவிருத்தியில் உண்மையில் அக்கறை உள்ளவர்களாயின் எதிர்வரும் 26ம் திகதி செவ்வாய்கிழமை சாஹிரா கல்லூரியில் மாலை 6.30 மணிக்கு மைதானம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொண்ள்ளும் படி வேண்டிக்கொள்கிறோம்.

-சாஹிரா கல்லூரி முகாமைத்துவம்,SDC, OBA –

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *