சாஹிரா கல்லூரி OBA யின் பொதுக் கூட்டம் தாமதம் ஆவது ஏன்?

ஒரு பாடசாலையின் கல்வி, கலை, கலாசாரம், பாரம்பரியம், விளையாட்டு, அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் நிர்வாகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உடல், பணம் மற்றும் ஏனைய வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவது கல்லூரியில் படித்து வெளியேறிய மாணவர்களினது கட்டாயக் கடமையாகும்.

இவ்வாறு வெளியேறிய மாணவர்கள் ஒரு குழுவாக, அமைப்பாக கல்லூரியின் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பே பழைய மாணவர் சங்கம் ஆகும்.

அந்த வகையில் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டு அந்த பொதுக்கூட்டத்தில் மூன்று வருடங்களுக்கான நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்படுகின்றது.

மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இறுதியாக நடைபெற்ற பொதுக் கூட்டம் 2011 ஜூலை மாதம் 31ம் திகதி சாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. அந்த வகையில் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவின் காலம் 2014 ஜூலை மாதம் 31ம் திகதியுடன் முடிவடைகின்றது.

தற்பொழுது மாவனல்லை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழுவின் காலம் நிறைவடைந்து ஏழு (7) மாதங்கள் கடந்துள்ளதகவும் உடனடியாக பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் நடைபெற வேண்டும் என்று மாவனல்லை சாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாமதப்படுத்துவதற்கான காரணம் என்ன?

அமைப்புக்களோ அல்லது இயக்கங்களோ அல்லது தனி நபர்களோ அவர்களின் பிரதி நிதிகளை இன்னும் புதிய நிர்வாகக் குழுவிற்கு தெரிவு செய்யவில்லையா???

மாவனல்லை சாஹிரா கல்லூரி அதிபர் அவர்களே இது உங்களின் கவனத்திற்கு…..

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *