சிங்கள ராவயவின் மிருக வதைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது

மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன்னர் மாவனல்லை நகரை வந்தடைந்தது. தற்பொழுது மாவனல்லை நகர் மத்தியில் கூட்டமொன்றை நடத்தி வருகின்றனர். இதேவேளை மாவனல்லை நகரமெங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டம் கடந்த 9ம் திகதி காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து ஆரம்பமானது.

இன்னும் ஒரு வார காலத்தினுள் மாடறுப்பு நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர்த் தியாகங்களை எதிர்க்கொள்ள வேண்டி வரும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கடும்போக்கு பெளத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள ராவய அமைப்புக்கு இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள்…

download (33)

1624391_10202303861970264_2051145684_n 1655260_10202303845129843_174480030_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *