சவுதியில் நச்சுவாய் கசிவு: திப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் வபாத்

சவூதி அரேபியாவில் தற்பொழுது கடுமையான குளிர் கால நிலை நிலவி வருவதால் தாம் தங்கியிருந்த அறையில் சூடேற்றும் சாதனத்தையும், நிலக்கரியைப் பயன்படுத்தி சூடாக்கிவிட்டு உறங்கியுள்ளனர். மூடப்பட்ட அறையொன்றில் நித்திரையில் இருந்தவர்கள் நச்சு வாயுவை சுவாசித்ததில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இச்சம்பவம்  திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்றதாக சவுதி பொலிஸார் தெரிவித்தனர்

திப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மொகமட் அனஸ் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் கிங் கஹல்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.மற்றையவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்து ள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த விபரங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரங்களை யும் வெளிவிவகார அமைச் சின் ஊடாகக் கோரியிருப்ப தாக வெளி நாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரந்தனிய தெரிவித்தார்.

You may also like...

2 Responses

 1. பாஸ்லின் says:

  மேலும், “சவுதியில் நச்சுவாய் கசிவு” என்று எழுதி இருக்கின்றீர்களே?

  இதில் செய்திக்குப் பொருத்தமான ஏதாவது அர்த்தம் உள்ளதா?

  “நச்சுவாய்” இது என்ன வார்த்தை?

  அடுத்து, அது என்ன நச்சுவாயு கசிவா?

  வெறும் மூச்சுத் தினறலுக்கே இப்படி எல்லாம் எழுதுவது கொஞ்சமும் நல்லாயில்லை. பட்டாசு வெடித்தால், அணுகுண்டு வெடிப்பு என்று போடுவீர்களோ?

 2. பாஸ்லின் says:

  “திப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர்” என்கின்ற முதல் திருத்தம் குறித்து மகிழ்ச்சி, உங்களுக்கு நன்றிகள்.

  நச்சு வாயுக் கசிவு என்பது, தொழிற்சாலைகள், சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களின் பொழுது பயன்படுத்தப் படுகின்றது.

  மேற்படி சம்பவம் மூச்சுத் தினறலினால் ஏற்பட்டது என்பதே சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares