சீரழியும் இன்றைய இளைய சமூகம்

இன்றைய இளம் தலைமுறையினருக்கு நல்லதை தெரிந்து கொள்ள நான்கு வழிகள் இருக்கிறது என்றால் கெட்டதை அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள் கிடைக்கின்றன. வளர் இளம் பருவத்தில் உள்ள 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களே அதிகம் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.

மாணவ, மாணவியர்கள் பாடப்புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், கைத்தொலைபேசிகள் ஒழித்து வைத்திருக்கின்றனர் . இதைக் கேள்விப்பட்டவுடன் நமது இளைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.

பெருநாள் தொழுகையை பள்ளிவாயலில் நடத்துவதா மைதானத்தில் நடத்துவதா என இரவு பகலாக கூட்டம் போட்டு பேசும் எம் தலைவர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் ஏன் எமது இளைய தலைமுறை மாணவ மாணவிகளின் ஒழுக்க சீர் கேடுகளுக்கான தீர்வுகளுக்கு ஒரு நடவைடிகையேனும் எடுப்பதில்லை?

தடுமாறும் இளைய தலைமுறை மாணவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. சினிமாவும், தொலைக்காட்சியும் ஏற்படுத்தி வரும் கலாச்சால சீர்கேடு தவிர தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் கையில் தவழும் கைத்தொலைபேசிகள், தெருவுக்கு தெரு பரவலாக இருக்கும் இண்டர்நெட் சென்டர்கள் மாணவர்களின் மனதை அலைபாயச் செய்கின்றன.

பாடசாலை மாணவிகளின் பைகளில் இருந்த காதல் கடிதங்கள்தான் சற்று யோசிக்கச் செய்கிறது. மாணவிகளுக்கு எதனால் இந்த தடுமாற்றம்?. இன்றைய கல்வி முறை எப்படிப்பட்டது?, மனப்பாடம் செய்யும் இயந்திரங்களை மட்டுமா ஆசியர்கள் தயார் செய்கின்றனர்?, பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மட்டும் நடத்தி விட்டு போதனை எதுவும் தராமல் விட்டுவிடுகின்றனரா?, பள்ளிகளில் பாலியல் கல்வி பற்றிய பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற தேவை எழுகின்றன.

9553016159_d18f65c5f2_b-1444029344917

போதை பொருள் பவனைக்கு அடிமையகியூள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகும் அதிகம் என ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. 12 வயது முதல் 16 வயது வரை உள்ள வளர் இளம் பருவத்தினர் அதிக அளவில் புகை மற்றும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவதாக அந்த ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மாணவிகளை விட மாணவர்கள்தான் அதிகளவில் சினிமாக்களை பார்த்து கெட்டுப்போய் உள்ளனர். புகையிலை பயன்பாடு குறித்த மற்ற விளம்பரங்கள் மாணவர்களை அதிகமாக கவரவில்லை. விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள் மிகவும் குறைவுதான். மாவனல்லையில் முழுவதும் பெரும்பாலும் 9,10,11,12,13 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களின் பண்பாடு குறித்து அவர்களின் பெற்றோர்களே முழுமையான அக்கரை கொள்ள வேண்டும். பாரம்பரிய மிக்க குடும்பத்து மாணவர்களாக இருந்தாலும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களிடம் இயல்பாக ஏற்படும் மாற்றங்களினால், கூடா நட்பினால், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களால் கவனம் சிதறும் போது பெற்றோர் அக்கரையோடு வழிகாட்டாவிட்டால் பண்பாட்டுச் சீரழிவுக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை கொள்ள வேண்டும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *