சுதந்திர கட்சியினை பிளவுப்படுத்த சில குழுக்கள் முயற்சி – அதாவுத

இலங்கையின் சுதந்திர கட்சியினை இரண்டாக பிளவுப்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.download

இதனை நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச,உதய கம்மன்பிள மற்றும் தினேஷ் குணவர்தன போன்ற முன்னாள் அமைச்சர்கள், சுதந்திர கட்சியினை பிளவு படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

இந்த ஊடக சந்திப்பில் இணைந்த கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்ககையில், ஐக்கிய தேசிய கட்சி யுடன் இரகசிய முறையில் சில குழுக்கள் இணைந்து சுதந்திர கட்சியினை பிளவுப்படுத்துவதிற்கு ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை சுதந்திர கட்சியினை விட்டு பிரிந்து செல்ல மாட்டார் என தான் நம்புவதாக அமைச்சர் டீ .ஜே . செனவிரத்ன குறிப்பிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *