ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லை கிளை தொடர்பில் ஞான­சார தேரர் (Audio)

மத்ரஸா மற்றும் பள்­ளி­வா­சல்­களின் மூல­மா­கவே பயங்­க­ர­வாதம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் அடிப்ப­டை­வா­தத்தை பலப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்­பா­டு­க­ளுக்கும் உட­ன­டி­யாக தடைவிதித்து முஸ்­லிம்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் எந்த முறை­யி­லா­வது இதை நாம் தடுக்­க வேண்டி வரும் என பொது­பல சேனா அமைப்பு தெரிவித்துள்­ளது.download-21-620x330

பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அந்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் சட்­ட­வி­ரோ­த­மா­கவும் அடிப்­ப­டை­வா­தத்தை பரப்பும் வகை­யிலும் செயற்­படும் 15 இஸ்­லா­மிய அமைப்­புகள் செயற்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக ஐ.ஐ.ஆர்.ஒ, ஐ.ஆர்.ஒ, அல-­சபாப், முசலி மார்க், முஸ்லிம் எயிட், நிடா, ஹிரா, எம்.எப்.சி.டி, செரண்டிப், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், அகில இலங்கை தவ்ஹித் ஜமாஅத், ஜமாத்தே இஸ்லாம், சலாபி போன்ற அமைப்­புகள் தான் இலங்­கையில் மிக­மோ­ச­மான வகையில் மத­மாற்று நட­வ­டிக்­கை­க­ளையும், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இதன்போது ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லை,அக்குரணை மற்றும் கிண்ணிய போன்ற கிளைகளின் பெயர்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த அமைப்­பு­களின் மூல­மா­கவே எமது இனம் அழிந்து வரு­கின்­றது. ஆகவே உட­ன­டி­யாக முஸ்­லிம்­களின் அடிப்­படை வாத செயற்­பா­டு­களை நிறுத்­த­வேண்டும்.

அதேபோல் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் மத­ர­சாக்­களை சுற்­றி­வ­ளைத்து விசா­ரிக்க வேண்டும். முடிந்தால் உட­ன­டி­யாக மத­ரசா கற்­கையை நிறுத்த வேண்டும். அதேபோல் முஸ்லிம் நாடு­களில் இருந்து வரும் புத்­த­கங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். ஹலால் தொடர்­பிலும் விசா­ரிக்க வேண்டும் என்றார்.

[playlist ids="18238"]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *