ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்காவிற்கு 2014ஆம் ஆண்டுக்கு புதிய மாணவிகள் அனுமதி

மாவனல்லை ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்காவிற்கு 2014ஆம் ஆண்டுக்கு புதிய மாணவிகள் அனுமதிப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அண்மையில் வெளியாகிய க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைந்து க.பொ.த உயர் தர வகுப்பில் கற்பதற்கு தகுதிபெற்றுள்ள 18 வயதிற்கு மேற்படாத மாணவிகளிடம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இக்கற்கை நெறியைத் தொடர விரும்பும் மாணவிகள் இம்மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சுயவிபரம் அடங்கிய கோவை ஒன்றை பதிவாளர், மாவனல்லை ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா, த.பொ.இல. 14, மாவனல்லை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றனர்.

தகுதியானவர்களைத் தெரிவு செய்யவதற்கான நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிப்பவர்கள் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த சாஃதரப் பரீட்சை பெறுபேறு, பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் வேறு சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்களிற்காக 0354923509 மற்றும் 0773950087 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.

1382314_318973248251431_756737367_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *