ஞான­சார தேரரின் கருத்து க­ல­வ­ரங்கள் ஏற்­ப­டுத்தும் – கபீர்

புனித அல்­குர்­ஆனை தடை­செய்ய வேண்டும் எனவும், மத மாறும் சட்­டத்தை நீக்க வேண்டும் என்றும் பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கூறியுள்ள கருத்து நாட்டில் இன­ங்களுக்கிடையே க­ல­வ­ரங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமையும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்துள்ளார்.kabir-hashim

அதேவேளை புதிய அர­சாங்கம் இன­வாத கருத்­துக்­களை ஒரு­போதும் கணக்கில் எடுக்கப் போவ­தில்லை எனவும், இத்­த­கைய அமைப்­புகள் குறித்து கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வெளியாகும் பத்திகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
நாட்டில் தேசிய நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யது எமது கட­மை­யாகும். ஏனைய மதக் கோட்­பா­டு­களில் தலை­யி­டு­வ­தற்கு அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளுக்கு எந்­த­வொரு தகு­தியும் கிடை­யாது. எமது ஆட்­சியில் இன­வாதம் இல்­லாத இலங்­கையை தோற்­று­விப்போம். அனைத்து மத சுதந்­தி­ரத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கத் திட்­ட­மிட்­டுள்ளோம்.

முன்­னைய ஆட்­சியின் போது இன­வாதம் தலை­வி­ரித்­தா­டி­யது. இவ்­வா­றான நிலைமை புதிய ஆட்­சியில் ஏற்­ப­டு­வ­தற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *