ஞானசார தேரர் குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அளுத்கம பிரதேசத்தில் கடந்த மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 1 மணி தொடக்கம் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதுதவிர, சிஹல ராவய அமைப்பின் உறுப்பினர் அக்மீமன தயாரதன தேரரிடமும் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அளுத்கமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஏனைய பேச்சாளர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10521982_850613598286830_961238589879472894_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *