தகைமையான அதிபர்கள் இல்லாது விழ்ச்சி பாதையில் செல்லும் மாவனல்லையில் சில பாடசாலைகள்

உரிய தகைமையுடைய அதிபர்கள் இல்லாது மாவனல்லையில் சில பாடசாலைகள் கடமை நிறைவேற்று அதிபர்களின் கீழ் செயற்படுகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உரிய அதிபர் நியமனங்கள் நியமிக்கப்படாத நிலையும் தொடர்கின்றது. அதே போன்று தகைமையான அதிபர்களும் பாடசாலைகள் பொறுப்பளிக்கப்படாமல் குறிப்பிட்ட கோட்டத்திலும் வலயத்திலும் தமைமைக்கேற்ற இடமில்லாதுமிருக்கின்றார்கள்.

kids_b

இவ்வாறு தகைமையான அதிபர்கள் இல்லாத பாடசாலைகளும் தகைமைக் கேற்ற பாடசாலை கிடைக்காத அதிபர்களும் என்று இன்று கல்வித் துறையில் இரு வரிசை நிலை காணப்படுகின்றது. ஒரு முறையான அதிபரில்லாத பாடசாலையில் ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தும் என்ன பயன்? பழைய மாணவர் சங்கம் இருந்தும் என்ன பயன்? பாடசாலை அபிவிருத்தி கமிட்டி இருந்தும் என்ன பயன்? என்ற கருத்து இதில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகிறது.

ஆனபோதும் பாடசாலைகளும் அதிபர்களும் தொடர்பாக சமூக மட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் பல சவால்களும் நடைமுறை சார் பிரச்சினைகளும் இவற்றை சீர்படுத்துவதிலும் தீர்த்து வைப்பதிலும் பல பின்னடைவுகளையும் எமக்குத் தருகின்றன என்பதும் மறுபுறம் காணப்படும் உண்மையாகும்.

அதாவது தகைமையான அதிபர் பாடசாலையைச் சிறப்பாக நடாத்த ஆளுமை அற்று காணப்படுவதும் தகைமை குறைந்த ஒருவர் ஆளுமை கூடிய ஒருவராகக் காணப்படுவதும் ஒருசில பாடசாலைகளின் நிலையாகக் காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாடசாலையின் வளர்ச்சி கருத்தில் கொள்ளப்பட்டு அங்கு தகைமையைவிடவும் ஆளுமை முன்னிலைப்படுத்தப்படும் நியாயம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடசாலைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

முன்பு ஒரு காலமிருந்தது முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ் அதிபர்களும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் அதிபர்களும் கடமையாற்றி போற்றத்தக்க கல்விப் பணிகளை மாற்றுச் சமூகங்களுக்குள் செய்திருக்கின்றார்கள். அதேபோன்று வெளி ஊர்களில் இருந்துதான் அத்தகைய அதிபர்கள் வந்துமிருக்கின்றார்கள்.

கல்வித் திணைக்களங்கள் இதனை மீறி உரிய தகைமைகளைக் கருத்தில்கொண்டு முறையாக அதிபர்களை நியமித்தால் பெற்றொர் பொதுமக்களைக் கொண்டு எங்கள் இனத்தவர் வேண்டும் எங்கள் ஊரவர் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களை எடுக்கின்றார்கள். இதனால் சில பாடசாலைகளில் அதிபர் சேவையில் இல்லாத ஆசிரியர்களிடமும் சொந்த ஊரான் என்ற தகைமைக்காக சில பாடசாலைகளை ஒப்படைக்கும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

பாடசாலைகளில் அதிபர்களை நியமிப்பதில் கவனம் கொள்ளும் மற்றுமொரு முக்கிய காரணம் அரசியல் தலையீடுகள் ஆகும். அரசியல்வாதிகள் தனது கட்சிக்காரர் அல்லது தனது அரசியலுக்காகப் பாடுபடுகின்றவர் என்ற காரணத்தினால் ஒருவருக்கான இடத்தை அவரது தகைமையோடும் அல்லது தகைமைக்கு அப்பாலும் பெற்றுக்கொடுக்கும் நிலை இன்று கல்வித் துறையில் தவிர்க்கமுடியாத ஒரு தலையீடாக வளர்ந்துள்ளது.

இந்நிலை அதிபர் பதவிகளில் மட்டுமல்ல அமைச்சின் உயர்மட்டத்திலிருந்து பாடசாலையின் சாதாரண மட்ட ஊழியர் வரைக்குமான எல்லாப் பதவி நிலைகளிலும் மேலோங்குகின்றன. ஒன்று இடமாற்றம் பெற்றுக்கொடுப்பது அல்லது வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்துச் செய்வது என்று அரசியல்வாதிகள் தான் சார்ந்த நபர்களைப் பதவிக்கு அமர்த்தும் அரசியலைச் செய்கின்றார்கள். இதற்கு மௌனம் காக்கும் நிலை தவிர்க்கமுடியாதபடி கல்வி நிர்வாகத்திற்கு ஏற்படுகின்றது.

இதுபோன்ற பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளால் கல்வி நிர்வாகத்தினால் சில பாடசாலைகளில் நிலவும் அதிபர் பிரச்சினைகள் குறித்து முழுமையான நீதியான தீர்மானங்களை எட்ட முடியாதிருக்கின்றது. இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களை எமது வரலாற்றில் காண முடிந்திருக்கின்றது.

ஆனபோதும் இவற்றுக்கெல்லாம் அப்பால் கல்வி அமைச்சு கல்வித் திணைக்களங்கள் ஆரோக்கியமான பாடசாலைக் கட்டமைப்புகளை உருவாக்கும் பொருட்டு இதனுடன் தொடர்புபடுகின்ற தரப்புகளிடம் கலந்துரையாடி தேவையான பாடசாலைகளில் உள்ள அதிபர் வெற்றிடங்களை முறையாகவும் நீதியாகவும் தீர்த்துவைக்க செயற்படுதல் நன்று.

ஆசிரியர்களின் மிகையும் அவர்களைச் சமப்படுத்துவதும் அவசியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது போன்று அதிபர்களின் மிகையும் அவர்களைச் சமப்படுத்துவதும்; நன்கு ஆராயப்படுதல் அவசியமாகும்.

இவ்வாறே தொடர்து சென்றால் எமது மாணவர்களின் எதிர்காலம் என்ன நடக்கும்??
உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சற்று சிந்தியுங்கள்……..

kids_b1

You may also like...

2 Responses

  1. fawshan says:

    zahira college i porutha variyil padasaliku adiper illi. muluvadium kavnipadu SDC ahavay adiper thavayillai pavam SDC urupinarhal thth thamdu valihai vitu vittu, tamadu pilaihali olungaha valkka mudiyadu, padasalikaha sahindranar ipadi irundal padasali munaruvadakku oru nalum vaypillai sandra varudathi vida inda varudam results , discipline anitumay kil thangiulladu

  2. Guest says:

    கனேதன்ன மதினா ஸ்கூலும் இப்படிதான் அபான் சேர் அதிபர் தரத்திற்கு தகுதியில்லா ஒரு அதிபராக 15 – 20 வருடம் அங்கு கடமையாற்றினார்;. வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்கூல் அங்கு அதிபராக இருந்தால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகுந்த மரியாதையுடன் வாழலாம் என்ற சுயநலம். போய் வர இலகு. கோகாலை மாவட்டத்தில் 1000 பாடசாலைகள் திட்டத்தில் தெரிவு செய்ப்பட்ட 2 முஸ்லிம் பாடசாலைகளின் ஒன்று தான் கனேதன்ன மதினா. நேரடியாக சனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் வந்து சகல வளங்களும் சனாதிபதி செயலகத்தால் நேரடியாக வழங்கப்படும். அதற்கான அதிபர் தரமும் வேறு. அந்த கல்வி அமைச்சின் அதிபருக்குரிய தரம் அபான் சேரிடம் இருக்கவில்லை. அப்படி தெரிவு செய்தால் புதிய அதிபர் வருவார் இவரும் ஊரை விட்டு வேறு பாடசாலைக்கு போக வேண்டும் என்பதால் தனது அரசியல் மற்றும் இயக்க ஆதரவாளர்கள் மூலம் மதினாவை 1000 பாடசாலைகள் திட்டத்தில் இருந்து நீக்கி கொண்டார். இதனால் மதினா 20 வருடங்கள் பின்னால் போனது. ஊரிலுள்ள மடையர்களுக்கு இந்த சுயநல சூழ்ச்சி தெரியவில்லை. இதனை ஊருக்கு மறைக்கவேகம்ய10ட்டர் லெப் மற்றும் சில நிர்மாணங்கள் செய்தார்;. இதை விட மிக அதிகமான வசதிகளை மதினா இழந்தது. பதுரியா அளவிற்கு வளங்களை அது 2 வருடங்களில் பெற்றிருக்கும். இதை விட கொடுமை அந்த சந்தர்ப்பம் ஒரு சிங்கள பாடசாலைக்கு சென்றது. தேசிய 1000 பாடசாலை திட்டத்தில் கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்லையில் உள்ள ஒரு முஸ்லிம் பாடசாலை மட்டுமே உள்ளது. இந்த சமூக துரோகம் யாருக்கும் விளங்கவில்லை. மாவனல்லையிலுள்ள எல்லோரின் கவனமும் சகிரா மீது மட்டுமே. அவர் இப்போது போய்விட்டார் ஊரில் எமது அப்பாவி சிறுவர்களின் கல்விநிலை என்ன??????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *