தயவுசெய்து வதந்திகளை நம்பவேண்டாம்…….

இன்று (17) மாலை கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பினாள் ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்த உண்ணாவிரதப் போரட்டம் மாவனல்லை பொலிசாரினால் நீதிமன்றத்தில் தடையுத்தரவை கோரியிருந்தனர் இதனை கருதிற்கொண்ட மாவனல்லை நீதிமன்றம் தடை உத்தரவினை பிறப்பித்தது.

download (9)

இதற்காக பாடுபட்ட மாவனல்லை பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் மாவனல்லை மக்கள் மற்றும் மாவனல்லை வியாபார சங்கம் மற்றும் மாவனல்லை நட்புறவு மன்றம் ஆகியன தனது நன்றிகளை தெரிவித்துகொள்கின்றனர்.

மாவனல்லை நகிரின் பாதுகாப்பினை மாவனல்லை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் உறுதி செய்துள்ளனர். மேலும் இன்று இரவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மாவனல்லை நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொது மக்கள் எந்த விதமான அச்சமும் கொள்ளாத் தேவையில்லை என வேண்டிக்கொள்வதோடு, மிகப் பொய்யான தவல்களை சிலர் பரப்பி வருகின்றனர். அவ்வாறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை வேண்டிகொள்கிறோம்.

மேலும் மாவனல்லை தொடர்பான உண்மையானதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை செய்திகளை வழங்க மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனத்துடன் இணைந்து மாவனல்லை நியூஸ் குழுவினர் தயாரகியூள்ளது.

அதாவது மாவனல்லை நகரில் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எதாவது சம்பவங்கள் நடைபெற்றால் மாவனல்லை மஸ்ஜித்களின் சம்மேளனம் உறுதிப்படுத்திய பின்னரே மாவனல்லை நியூஸ் குழுவினர் செய்திகளை வெளியிடும். தயவுசெய்து வதந்திகளை நம்பவேண்டாம்.

உடனுக்குடன் இருபத்திநான்கு மணிநேரமும் மாவனல்லை தொடர்பான உண்மையான செய்திகளை வழங்க மாவனல்லை நியூஸ் குழுவினர் தயாராகவுள்ளோம்.

10301423_661783050566644_5696743087723538996_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *