தராவீஹ் தொழுகையை பெண்கள் வீட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் – அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி

நாட்டிலுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தராவீஹ் தொழுகையை பெண்கள் வீட்டில் அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி நாட்டு முஸ்லிம்களிடம் கேட்டுக்கொண்டார்.

இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக்குழுவின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்து கொள்பவர்கள் தொழுகையைப் பள்ளிவாயலில் அமைத்துக் கொள்ளலாம். நாம் இம்மாதத்தில் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். தராவீஹ் தொழுகை முடிந்ததும் வீடுகளுக்கு செல்லும் பழக்கத்தை எமது வாலிபர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இந்த மாதம் அடுத்தவர்களுக்கு பிரச்சினைக்குரிய ஒரு மாதமாக மாறிவிடக் கூடாது.

அநியாயம் உலகில் நிலைத்தது கிடையாது. நிச்சமாக அல்லாஹ்வின் உதவி நல்லடியார்களுக்கு இருக்கின்றது. நாட்டில் எப்பாகத்திலும் எந்தவொரு நிகழ்வு ஏற்பட்டபோதும் அதனை சட்ட ரீதியில் அணுக வேண்டும். சட்டத்தைக் கையில் எடுப்பது முஸ்லிம்களின் முன்மாதிரி அல்ல. அடுத்த கட்டமாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். இந்த இரண்டு முறைகளும் தான் இப்போதைக்கு எமக்குள்ள முக்கிய வழிமுறைகளாகும் எனவும் ஜம்இய்யாவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

index

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares