தலவத்துகொடை BMW விபத்து தொடர்பில் கபீர் ஹாசீம் விளக்கம்

அன்மையில் தலவத்துகொடை பகுதியில் விபத்திற்குள்ளான சொகுசு கார் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

இந்த சொகுசு காரை ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரின் மகன் செலுத்தியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டிருந்தது.

தலவத்துகொடையில் கடந்த ஞாயற்றுக்கிழமை விபத்திற்குள்ளான காரை தனது உறவினர் ஒருவரே செலுத்தியதாக உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கபீர் ஹாஷீம் விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தலவத்துகொடையில் 2018 – 03 – 17 ஆம் திகதி பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் மேலும் இரண்டு காரும் விபத்திற்குள்ளானமை தொடர்பில் சில இணையத்தளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளேன்.

விபத்திற்குள்ளான காரை எனது உறவினர் ஒருவரே செலுத்தியுள்ளார் என்பதுடன், அவர் எனது அமைச்சின் அதிகாரி ஒருவர் அல்ல என்பதுடன், அவர் எனது அரசியல் விடயங்களில் எவ்வகையிலும் தொடர்புபடவில்லை என்பதனையும் அறியத் தருகிறேன்.

இது தொடர்பில் பொலிஸார் முன்னெடுக்கும் பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க நான் எவ்வேளையிலும் தயாராக இருக்கிறேன் என்பதனை கூற விரும்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு – நம்பிக்கையுடன்

கபீர் ஹாஷீம்
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *