தள + தளபதி தருதலைகளால் நாசமாய்போகும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு..!

இன்றைக்கு இஸ்லாமிய இளைய சமூகம் இந்த கூத்தாடிகளைத் தான் தலை என்றும் தளபதி என்றும் தருதலைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டும் அவர்களின் அசிங்கமான விபச்சார வாழ்க்கை முறைகளை பின்பற்றி கொண்டும் இருக்கின்றார்கள்!

அவர்களை போன்று தாடியை சிறைத்து பெண்ணின் முகத்தைப் போல பல பல என்று காட்டுவதும் அவர்களை போன்று தலை முடியை வெட்டுவதும்.

மொத்தத்தில் அவர்கள் இறைவனுக்கு இணைவைக்கும் தருதலைகளை தலைவனாக ஏற்று அவர்களின் கேடுகெட்ட விபச்சார வாழ்க்கையையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். நவுதுபில்லாஹ்.

imgvijays-puli-first-look-ajiths-thala-56-launch-day

நாம் யாரை தலைவனாக ஏற்க வேண்டும்??? யாருடைய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்??? என்பதை யோசித்து இருந்தால் இப்படி செய்வார்களா???

இவர்கள் படங்களில் சொல்வதை போல நிஜ வாழ்க்கையில் செய்து காட்டுபவர்ளா? பக்கம் பக்கமாக வசனத்தை பேசுகிறார்கள் ஆனால், அது அவர்களின் நிஜ வாழ்வில் இருக்கிறதா என்பதை யோசித்து பார்க்கிறோமா?
ஆனால்…

தான் சொன்னதையே தன் உயிர் மூச்சாக வாழ்ந்து காட்டியவர் உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்கள். அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லவா அல்லாஹ் ”அழகிய முன்மாதிரி” என நமக்கு சொல்கிறான்.

இளைய சமுதாயமே.!!!!!!!

இன்று, நீங்கள் இப்படிப்பட்ட முன் மாதிரியை விட்டுவிட்டு யார் யாரையோ முன்மாதிரிகளாக ஆக்கிக் கொண்டுள்ளீர்களே. நாளை மறுமையில் உங்களுக்காக இந்த கெடு கெட்ட “தல” “தளபதி ” போன்ற தருதலைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து சொர்க்கத்திற்கு அழைுத்து செல்வார்களா?

அல்லாஹ் பாதுகாப்பானாக..

இதை எல்லாம் நீங்கள் யோசிக்காமல் இவர்களுக்காக வைக்கும் பேனர்களையும், கட்-அவுட்களையும் அதில் எழுதி உள்ள வார்தைகளையும் பார்த்தால் மனம் நொந்து வேதனை அடைகின்றது யாருக்காக நீங்கள் பேனர் வைக்கிறீர்கள்?? மக்களை நேர்வழி படுத்த வந்த உத்தமர்கலுக்காகவா??

மார்கத்தை எதிரிகளிடம் இருந்து காக்க தியாகம் செய்தவர்கலுக்காகவா?? பணத்தை வாங்கிக் கொண்டு மலத்தை திங்கச் சொன்னாலும் தயங்காமல் அதை தின்பவர்களுக்காக…!!! இதில் இந்த கூத்தாடிகளின் படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்தோடு எப்போது டா படம் ரிலீசாகும் என காத்து கிடந்து பார்க்கிறார்கள்.

என்றைக்காவது இவர்கள் தொழுக்கைகாக காத்து கிடந்தது உண்டா?? குர்-ஆனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டது உண்டா?

எங்க “தளபதி” இப்டி
எங்க “தல” அப்டி.
என
கூத்தாடி தருதலைகளின் வாழ்க்கையை துருவி ஆராய்ந்து அதை பறை சாற்றும் நீங்கள்
உங்களின் நபியின் வாழ்க்கையை ஆராய்ந்தது உண்டா??

அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்ததுண்டா? நபியை பற்றி பிற மக்களிடம் எடுத்து சொல்ல முனைந்ததுண்டா??

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். என் அன்பு சகோதரர்களே… நாளை அல்லாஹ்-விடம் செல்ல இருக்கிறோம், சொர்க்கம் நரகம் என்று இருக்கிறது அதற்கு முன்பு கேள்வி கணக்கு இருக்கிறது என்பதை சற்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. – அல்குர்ஆன்(33:21)

  • Mohamed Shajahan

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *