தும்புலுவாவ பிரதேசங்களில் மண்சரிவு அபாயம், 94 குடும்பங்கள் இடம்பெயர்வு

WhatsApp-Image-20160524

அரநாயக்க, ஹெம்மாதகம, தும்புலுவாவ பஹன்திபுகலகந்த மலைப் பிரதேசத்தில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால், அப்பிரதேசங்களிலுள்ள இரு கிராமங்களின் 94 குடும்பங்களைச் சேர்ந்த 354 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு நேற்று (25) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தும்புலுவாவ கிராமத்தில் 64 குடும்பங்களைச் சேந்த 235 பேரும், யோதகம கிராமத்தில் 30 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேரும் இவ்வாறு வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் அமர்த்தப்பட்டிருப்பதாக அரநாயக்க மற்றும் மாவனல்லை பிரதேச செயலகங்கள் அறிவித்துள்ளன.

இதில், மாவனல்லை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தும்புலுவாவ கிராமத்தின் 26 குடும்பங்கள் ஹெம்மாதகம கபுருக்க விகாரையிலும், அரநாயக்க பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்கள் யோதகம கிராமவாசிகளில் 27 குடும்பத்தினர் மெதிலிய ரஜமஹா விகாரையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *