தெல்கஹகொடையில் சா.த. பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

மாவனல்லை, தெல்கஹகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் 2015 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கான பாராட்டு நிகழ்வும் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும் கடந்த 29 ஆம் திகதி பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தெல்கஹகொட கால்டன் விளையாட்டுக் கலகம், ஜம்இய்யத்துத் தளபா மற்றும் அல்-ரஹ்மத் அமைப்பு ஆகியஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சேவையை பாராட்டி பாடாசலை அதிபர் ஏ. எம். ஷஹீம் அவர்களுக்கு நிகழ்வின் பிரதம அதிதியாக வருகை தந்திருந்த மாவனல்லை கல்வி வளைய உதவி பணிப்பாளர ஏ.எஸ். நஜீம் மூலம் நினைவு சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்நிகழ்வில் சாதாரண தர பரீட்சையில் 9ஏ பெற்று சித்தியடைந்த தெல்கஹகொட பிரதேச மாணவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.

தெல்கஹகொட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயம் மாவனல்லை கல்வி வளைய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் சா.த பெறுபேறுகளில் தொடர்ந்தேர்ச்சியாக இரண்டாவது முறையும் முதலிடம் பெற்றுள்ளதுடன் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 16 மாணவர்களும் உயர் தரத்துக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்கஹகொட ஜும்மா பள்ளி நிர்வாக சபை தலைவர் எ.எம். சாஹிர், வளவாளர் யாஸ்மின் முபாரக் மற்றும் மாவனல்லை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

63c4a42e-8378-4050-9dc9-1e0ddaab8b30-1024x576 IMG_8843-1024x683 IMG_8907_1-1024x632

 

 

You may also like...

1 Response

  1. Shamil says:

    Masha allah
    Thanks for Allah
    Alhamdulillah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares