தெவனகலை விஹரைக்கு ஆய்வுக்காக சென்ற குழுவுக்கு அச்சுறுத்தல்

கடந்த சனிக்கிழமை (01) தெவனகலை குன்றிலுள்ள விஹரைக்கு ஆய்வு நடவடிக்கைகளுக்காக சென்ற ஆய்வுக்குழுவுக்கு அச்சுறுத்தல்

இந்த ஆய்வுக்குழுவில் கலந்துகொண்ட அங்கத்தவர்கள்:

Dr. Ariyasena Gamage – president MPFF

Mr. A.G. Karunarathna – President DPFF , senior registrar – Rajarata university

Prof. Tudar Silva-  பேராசிரியர், சமூகவியல் துறை, பேராதனை பல்கலைகழகம்.

Dr. Philips (USA) – Socialogy Department, University of Peradeniya, Phd (reading) in Buddhism

M.M. Faizal- joint secretary DPFF, medical lab technologist, Bsc Biochemistry

காலை 6.30 மணியளவில் இக்குழு குன்றை அடைந்து சிவில் பாதுகாப்பு அதிகாரியின் (தயாரத்ன) வழிகாட்டலுடனும் ஒத்துழைப்புடனும் ஆய்வுக்குத்தேவையான தகவல்களை சேகரித்தனர்.

8.30 மணியளவில் குன்றுக்கு பீதியுடன் வந்த பியல் எனும் மேசன் தொழிலாளி, வெளியிடதிலுள்ளவர்கள் இங்கு வர தடை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊர் மக்கள் 100 பேரை கூட்டியுள்ளதாகவும் ஒரு அடியேனும் அகல வேண்டாம் எனவும்  அச்சுறுத்த ஆரம்பித்தார். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், பியலிற்கு கடுமையாக எச்சரித்த பின் போலிஸ்  நிலையத்திற்கு  அறிவித்தார்.

பொலிசார்   நிலையதிட்கு வருகையில்  நுழைவாயிலில் கூடியிருந்த அல்பிடிய விகாரை பிக்கு தலைமையிலான 20 பேர் கொண்ட குழு ஆய்வுகுலுவுடன் வாக்குவாதப்பட்டதனர். விசேடமாக DPFF முஸ்லிம் உறுப்பினர் M.M. Faizal அவர்களுடைய வருகையை கடுமையாக எதிர்த்தனர். M.M. Faizal உட்பட குழுவினர் போதுமான விளக்கம் அளித்தும் செவிமடுக்க தயாராக அவர்கள் இருக்கவில்லை.

பொலிஸ் பொறுப்பதிகாரி பிக்குமருடன் வாக்குவாதப்படுவதை தவிர்க்குமாறு M.M. Faizal அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் குழு பொலிஸ் பாதுகாப்புடன் மாவனல்லையை அடைந்தது.

இது சம்பந்தமாக மாவனல்லை நியூஸ் M.M. Faizal அவர்களை சந்திந்து வினவிய போது:

“புராதன  தெவனகலை விகாரை உட்பட சரித்திர பிரசித்தி பெற்ற இடம் தொடர்பாக  பல கருத்து முரண்பாடுகள்  நிலவுகின்றன.  மேற்கொண்ட ஆய்வுகளில் தொல்பொருள்  திணைக்களத்துக்கு  தெரியாத பல விடயங்களை கண்டறிய எம்மால் முடிந்துள்ளது விஞ்ஞான பூர்வமாக முழுமையாக இவற்றை புத்திஜீவிகளின் அறிவுரையின் அடிப்படையில் ஆராய்ந்து தெவனகலையின் பிராதன முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை களைந்து  உண்மையான தகவல்களை புத்தகவடிவத்தில் கொண்டு வருவதன்  மூலம் இதன் பிறகு எக்காலத்திலும் இப்பிரச்சினை தலை தூக்காமல் இருக்கும் படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையே நாம் மேற்கொள்கிறோம்.

இதன் மூலம் மட்டுமே மாவனல்லை பகுதியில் தலை தூக்கும் இனமுறுகல் நிலையை சமாளிக்கலாம். இப்பணிக்கு (முஸ்லிம்) புத்திஜீவிகள் மற்றும் தலைவர்களின் ஒத்துழைப்பும் பல மடங்கு அதிகமாகத்தேவைப்படுகிறது. எனினும் மிகச்சொற்ப அளவிலேயே கிடைக்கிறது என்பது சகோதர இன புத்திஜீவிகளின் பலத்த ஆதங்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

“இது விடயமாக  தெவனகலையை சூழவுள்ள மக்கள் மற்றும் பிரச்சினைக்கு நேரடியாக முகம் கொடுக்கும் மக்களது கரிசனை மட்டுமல்லாது முளுச்சமூகத்தினதும் கடமையாகும்” என்பதை புதிதாகக்கூற  வேண்டியதில்லை.

எனினும் இவ்விரு பகுதியிலிருந்தும் போதியளவு கரிசனை இல்லாதது பாரிய அச்சுறுத்தலாகவும் சவாலாகவும்  மாறியுள்ளது.

download (20) download (21) download (22)

 

20140301_081612

20140301_081616

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares