தெவனகல எரிமலையாக மாறலாம்!!

தெவனகல விகாரையின் வரலாறு: 

முன்னைய காலங்களில் இந்த மலை தாசேன்பச்ச, கித்சேன்பச்ச, அவரகிரி, தேவகிரி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் மாயதுன்ன அரசின் சத்தரகோரல பிரதேசத்துக்கு இந்த மலை உறுத்தாகியிருந்தது. தெவனகல ரஜமகா விகாரை தொடர்பான முதலாவது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விபரங்கள் அனுராதபுர யுகத்தின் தாதுசேன மன்னன் காலத்தில் கிடைக்கப்பட்டது. (கி.பி. 459-477) அன்று இது தாசேன்பச்ச ஆகும். பின், பொலன்னறுவை யுகத்தின் மகா பராக்கிரமபாகு காலப்பகுதியில் பர்மா நாட்டின் குசூமிய நகரை ஆக்கிரமிப்புச் செய்த படைத் தளபதிக்கு இந்த மலை மன்னரால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 தெவனகல முஸ்லிம் வரலாறு: 

இலங்கையினுள் முஸ்லிம்களின் வரலாறு ஆயிரம் வருடங்கள் இருக்கும். தெவனகல இப்பிரதேசத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மலை நாட்டரசின் தலைநகருக்கு மிகவும் நெருங்கியது. தெவனகல கிராமத்தின் எல்லையோடு இருக்கும் உயன்வத்தைப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் மூதாதையோர் அக்கால மன்னர்களுக்கு வைத்தியம் செய்த மூர்வர்களாவர். அவர்களின் சிங்கள வாசகம் கொண்ட முன் பெயர்கள் இதற்குச் சாட்சி பகர்கின்றன. தெவனகல என்பது உயன்வத்தைப் பிரதேசத்தின் விரிவாகும். இங்குள்ள பெரும்பாலான முஸ்லிம்களின் முன்பெயர்கள் சிங்களமாகும். துனுகம மாளியத்தே வெதமுகாந்திரம் என்பது ஒருவரின் வாசகம். களுதா மலுகெதர மற்றொருவரின் வாசகம். இந்த கிராமத்தின் பெரும்பாலான முஸ்லிம் பெயர்களுக்கு முன் சிங்களவர்களின் முன் பெயர்களே காணப்படுகின்றன.download (54)

தெவனகல பகுதி முஸ்லிம்கள் ஆறாவது பரம்பரையை எட்டியுள்ளனர். தற்போது தோன்றியுள்ள பிரச்சினை காரணமாக தமது நிலங்கள் பரிபோகலாம் என்ற அச்சத்தில் உறைந்துள்ள அதிகமான முஸ்லிம்களின் காணிகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. அது உரிமைச் சான்றிதழ் ஆகும்.

அதிகமான காணி உறுதிகளின் வரைபுகள் ஆயிரத்துத் தொல்லாயிரம் வருட காணி அளவீடு காலம் வரை பழைமையானது. அதிகமான முஸ்லிம்கள் சிங்கள மக்களிடமிருந்து இந்தக் காணிகளை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர். இவ்வாறான உரித்துகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தை தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்க போராட்டம் நடத்துவது எதற்காக?

 தெவனகல மோதல்: 

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தெவனகல மலையைச் சுற்றி 800 குடும்பங்கள் அளவு வசிக்கின்றனர். இவர்களுள் அதிகமானோர் சிங்கள மக்கள். சிறு தொகையினராகவே முஸ்லிம்கள் உள்ளனர். 2004, 2005 இரண்டு வருடங்களுக்கு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் இரண்டை வெளியிட்டது. அது தெவனகல புனித பூமி என்ற பெயரிலாகும். இந்த வர்த்தமானி அறிவித்தலில் சொல்லப்படுவது என்னவென்றால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தெவனகல மலைப் பகுதியைச் சுற்றி எல்லைகளை வகுத்து அதற்கு முன்பாக 400 மீற்றர் பழைய வலையத்தை அளந்து குறியீடுகளை இடவேண்டும் என்பதாகும். இந்த மோதலின் அடிப்படை இந்த வர்த்தமானி அறிவித்தல்களாகும். என்றாலும், 2005 இல் இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்ட போதிலும் இதுவரை குறிப்பிட்ட பிரகாரம் உரிய அளவீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்ட போதிலும் இது சிங்கள முஸ்லிம் ஒற்றுமைக்கு அன்று அச்சுறுத்தலாக இருக்கவில்லை. எனினும், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அடுத்து, களத்துக்கு வந்திருக்கும் ஒரு சில அமைப்புக்கள் இப்புனித பூமி அளவீடுகள் செய்யப்பட வேண்டும் என தலையீடுகளை மேற்கொள்வதே இந்தப் பிரச்சினைக்கான அடிப்படையாகவுள்ளது. அது இன்று இன மோதல் வரை விரிவடைந்துள்ளது.

பிரச்சினைகளை மாற்றியமைத்தார்கள்!

தெவனகல விகாரை பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு எவரும் எதிர்ப்பில்லை. ஏனைய இன, மத மக்களை கௌரவப்படுத்திக் கொண்டே இதனைச் செய்ய வேண்டும். நான் சொல்வது என்னவென்றால், இங்கு இன மோதல் ஏற்படாதவாறு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பது தான். 2005 இல், இந்த உள்வாங்கப்படவேண்டிய வலயம் குறித்து சிங்கள மக்கள் அறிந்திருக்க வில்லை. தற்போது அவர்கள் வெளியிடங்களிலிருந்து வருகின்ற சில அமைப்புக்கள் சொல்லக் கூடிய விடங்களை ஏற்றுக்கொண்டு குருடர்கள் போல் ஆகியிருக்கிறார்கள். தற்போது மலையடிவாரத்தை எல்லையாகக் கொண்டு சுற்றிவர 400 மீற்றர் அளந்தால் அப்பகுதியில் வசித்து வரும் 800 குடும்பங்கள் வரை அதற்குள் உள்வாங்கப்படுவர். இதில் 600 சிங்கள, 200 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. என்றாலும், வெளியிடங்களிலிருந்து வருகின்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், முஸ்லிம்கள் இருக்கும் பகுதியை அளவீடு செய்ய வேண்டும் என்பது தான். அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அவர்களை அவ்வாறு விரட்டியடிக்கும் பட்சத்தில் உமக்கு அந்தப் பெரிய வீட்டைத் தருவேன் அல்லது அதைத் தருவேன், இதைத் தருவேன், எனச் சொல்லப்படுகிறது. தற்போது இந்த மக்கள் இந்த வார்த்தைகளை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும், இவ்வாறான விடங்களை எதிர்க்கும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் உடையவர்களும் இங்கு இருக்கிறார்கள். நாம் அவர்களை நினைத்துக்கொண்டு தெவனகல நற்புறவுச் சங்கம் ஒன்றினையும் அமைத்தோம்.

download (59)

 

2001 இல் மாவனல்லையில் இடம்பெற்ற நிகழ்வு குறித்து எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. பயமும் இருக்கிறது. மீண்டும் ஒரு இவ்வாறான சம்பவம் நடக்குமோ என்று. எனவே, மாவனல்லை மக்கள் நட்புறவுச் சங்கம் போன்று தெவனகல மக்கள் நட்புறவுச் சங்கத்தோடு இணைந்து இப்பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காண விரும்புகிறோம். இரண்டு பிரிவினரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும். இந்தப் பிரச்சினை சிங்கள முஸ்லிம் இரு இனங்களையும் பாதிக்கிறது.

 மாற்றியமைப்பது யார்? 

2004, 2005 காலப் பகுதியில் இந்தப் பிரச்சினை முதலில் ஆரம்பமான போது மாகாண முதலமைச்சர் எமக்கு வாய் மூலமான விடையொன்றைத் தந்தாhர். அத்தோடு இந்தப் பிரச்சினை மங்கியது. நாட்டின் தற்போது தோன்றியுள்ள முஸ்லிம் விரோத செயற்பாடுகளை அடுத்து, மைத்திரிய சகன மன்றமே இந்த விவகாரத்தை மீண்டும் ஆரம்பித்தது. இவர்கள் கடந்த ஆண்டு, ஜூலை 14 ஆம் திகதி மலை மேட்டில் ஒளி பெருக்கிகளைப் பயன்படுத்தி நபிகள் நாயகத்துக்கும் அல்லாஹ்வுக்கும் மோசமாக ஏசினார்கள். அவமதித்தார்கள். அதற்காக வேண்டி அவர்களுக்கு எதிராக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறோம். நாங்கள் நீண்ட காலம் பொறுமை காத்திருக்கிறோம். பின்பு, சிங்கள ராவய அமைப்பு தற்கொலைப் படையொன்றை எடுத்து வருவதாகச் சொன்னார்கள். அவர்கள் டிசம்பர் 23 ஆம் திகதி வந்தார்கள். பின்பு போட்டிக்கு மாதிரி பொதுபல சேனா ஜனவரி 10 இல் வந்தது. இதனால், மக்கள் பயந்து நிம்மதியிழந்திருக்கிறார்கள். அண்மையில் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இந்தப் பகுதியை அளவீடு செய்ய வந்தார்கள். நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் திரும்பிச் சென்றார்கள். மீண்டும் எப்போது வருவார்களோ தெரியாது. அது தெவனகல மக்கள் நட்புறவுச் சங்கச் செயலாளர் முஹம்மது மஃரூப் பைசாலின் குரல்.download (60)

தெவனகல பகுதியில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் பீதியுடனேயே தமது அன்றாட வாழ்க்கையை ஓட்டிச் செல்கின்றனர். நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் வந்து தமது வீடுகளை எந்த நேரத்தில் தமது பொறுப்பில் எடுத்து விடுவார்களோ என்ற சந்தேகத்தினால் தான் சகோதரர் அன்வர் அதனை வார்த்தையாகப் புரட்டினார்.

‘என்னிடம் இருக்கும் காணி உறுதி 130 வருடப் பழைமை வாய்ந்தது. இங்கு எனக்குப் 10 பேர்ச் காணி இருக்கிறது. முன்னால் வீதி, பின்னால் மலை. 1900 மாதிரி வரைபின் பிரகாரமே நான் இந்த வீட்டை நிர்மாணித்துள்ளேன். அப்போது எல்லைக் கல் மிகவும் பின்னே இருந்தது. இப்போது அந்தக் கல் எங்களை மிதித்துக் கொண்டு செல்வது போல் மிக அருகில் வந்திருக்கிறது. இது நியாயமற்ற செயல். வாழ் நாள் முழுவதும் சம்பாதித்து இந்த வீடு வாசல்களைக் கட்டியிருக்கிறோம். என்றாலும், இந்த சகல பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கு மாத்திரமே. விகாரைக்குச் சொந்தமென புதிதாக வகுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் சிங்கள மக்களும் அகப்படுகிறார்கள். அவர்களுக்குப் பிரச்சினை இல்லையாம். இந்தச் சகல கதைகளையும் ஒன்றையொன்று சேர்த்துப் பார்க்கும் போது சூடாகியுள்ள மலைக்கு மேல் பெரும்தொகை வைக்கோலைக் கொட்டுவதற்கு முடியும். இந்த வைக்கோலுக்கு பாரிய எரிமலையொன்றை உருவாக்கவும் முடியும்.

download (58)

எரியும் நெருப்புக்கு பேஸ்புக் வைக்கோல்!

கடந்த ஆண்டு ஹலால் விவகாரத்தோடு நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்காக அதன் ஏற்பாட்டாளர்கள் மக்களைத் தெளிவுபடுத்த இணையத்தளங்களைப் பயன்படுத்தினர். (பேஸ்புக், டுவிட்டர்) அதன் தொடராக தெவனகலப் பிரச்சினையின் போது அவர்கள் இன, மற்றும் மத பேதங்களை உருவாக்கும் நோக்கில் மீண்டும் ஒரு படி முன்னேறி இணையத்தளப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டது. சிங்கள ராவய அமைப்பு தற்கொலைப் படையை அனுப்பி தெவனகலையை முஸ்லிம்களிடமிருந்து மீட்கப் போவதாக பேஸ்புக் ஊடாகப் பிரச்சாரம் செய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி தெவனகல காணி அளவீட்டின் போது நாட்டுப் பற்றுள்ள மக்களை ஒன்று திரளுமாறு இணையத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்தது. அத்தோடு தெவனகல போராட்டத்துக்காக சிலரது தலைகளை மொட்டையடித்து தயார்படுத்தும் காட்சிகளும் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டன. அடுத்த பக்கத்தில் இனவாதமற்ற சிலரின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக பேஸ்புக் மூலம் மோசமான பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தூஷன வார்த்தைகளையும் பயன்படுத்தினர்.

இந்த சகல இனவாத இராணுவமும் படைகளும் ராவனாக்களும் பௌத்தத்தின் பேரில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. இந்த யுத்தத்துக்கு தமது கைகளை உயர்த்துவதா என்பதை தெவனகல மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிங்கள மக்கள் இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் முடிவு கிடைக்கும் வரை தெவனகல பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால், தெவனகலையை அவர்களுக்கு எரிமலையாக்கவும் முடியும். இன்றேல், சமாதானத்தின், இன நல்லிணக்கத்தின் சுதந்திர மலை மேடாகவும் மாற்றியமைக்கவும் முடியும். அது உங்கள் கைகளில்!

நன்றி – ராவய

நன்றி – dailyceylon

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *