தெவனகல குன்று பிரதேசத்தினை அளக்கும் வேளையை இன்று ஆரம்பிக்க திட்டம்

தெவனகல குன்றை சுற்றயுள்ள பிரதேசத்தினை அளக்கும் வேளையை கேகாலை நில அளவைத் திணைகளம் இன்று (03) ஆரம்பிக்க இருபதாகவும் அதற்கமைய 72 எக்கர் பிரதேசத்தினை  தொல்பொருளியல்  வலையமாகவும் அடையாளமிட திட்டமிட்டுள்ளதாககவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை 28ம் திகதி மாவனெல்லை நகர மத்தியில் பிக்குகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் (28) மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தனர். மேலும் இப் பிரதேசத்தினை அளக்கும் வேளையை உடனடியாக அரம்பிப்பதற்கு கேகாலை நில அளவைத் திணைகளத்திற்கு 54400 ரூபாய் பணத்தினை ஒரு கிழமையிகுல் தொல்பொருளியல் திணைகளத்தினால் வழங்குவதாகவும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்கள் உறுதியளித்தானர். இதற்கு அமையவே இன்று (03) பிரதேசத்தினை அளக்கும் வேளையை கேகாலை நில அளவைத் திணைகளம் மேற்கொள்ளவுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *