தெவனகல பிரச்சினை சம்பந்தமான இன்றைய விஷேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடுவுகள்.

தெவனகல பிரச்சினை சம்பந்தமான விஷேட கூட்டம் ஒன்று இன்று (05) காலை 10 மணிக்கு கேகாலை கச்சேரியில் நடைபெற்றது. இக்கூட்டதில் கடுகஹவத்த உயன்வத்த ஊர் பிரதிநிதிகளும், பள்ளிவாயல் நிர்வாகிகளும், மாவனெல்லை பிரதேச சபை உறுப்பினர்கள், மாவனெல்லை பிரதேச செயலாளர், தொல்பொருளியல் திணைகள அதிகாரிகள், நில அளவைத் திணைகள அதிகாரிகள் மற்றும் கிராமிய விவகாரங்கள் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன, தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தின் போது 2006 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியின் 6 அடி பிரதேசமும் தெவனகல குன்றில்லிருந்து 400 மிட்டர் நிலப்பரப்பு தெவனகல புனித பூமி வலையமாக அளப்பதத்கும் முடிவு எடுக்கப்படுள்ளது. மீண்டும் டிசெம்பர் மாதம் 23 ம் திகதி நில அளவைத் திணைகள அதிகாரிகள் குறித்த இடத்துகு வருவதாக இக்கூட்டத்தின் போது முடிவுஎடுக்கப்பட்டள்ளது. இதற்கு முன் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை தொல்பொருளியல் திணைகளத்தினால் மேட்கொள்ளவுள்ளனர்.download

தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பு மற்றும் அங்கு வந்திருந்த இனவாதிகளோ இத் தீர்மானங்களுகு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களின் குறிக்கோள் முஸ்லிம்களை அப்பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதாகவும்.

மேலும் முஸ்லிம்கள் சார்பாக இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எட்டப்பட்ட முடிவுகளுகு ஏவ்வித ஆதரவும் தெரிவிக்கவில்லை. இது சம்பந்தமான விஷேட கூட்டமொன்று இன்று (05) இஷாஹ் தொழுகையின் பின்னர் கடுகஹவாத்த ஜும்மா பள்ளிவாயிலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இன்ஷாஅல்லாஹ் இக்கூட்டத்தி எடுக்கப்படும் முடிவுகளை உங்களுகு அறியத்தருகின்றம்.

disapathi devanagala

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *