தெவனகல முஸ்லிம்களும் பிக்குகளின் உண்ணாவிரதப் போராட்டமும்

தெவனகலை பெளத்தர்களின் புனித பூமி இந்தக் குன்றினைச் சுற்றி வாழும் முஸ்லிம்கள் இந்த புனித பூமியை ஆக்கிரமித்தவர்கள். சூழவுள்ள முஸ்லிம்களை தெவனகலையிலிருந்து விரட்டியடிப்போம். அத்ற்கு பதிலாக பெளத்தர்களை குடியேற்றுவோம்”  மேற்குறிப்பிட்ட சுலோகங்கள் கடந்த 5,6 மாத காலமாக இனவாதிகளால் ஜபிக்கப்படும் வாசகங்களாகும்.

தெவனகலை குன்றில் அமைந்துள்ள் விகாரையில் “மைத்ரி சஹன பதனம ” எனும் அமைப்பினால் கடந்த ஜூலை மாதம் 14 ம்திகதி மலை 3 மணியள்வில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டததில் மேற்குறிப்பிட்ட விஷக்கருத்துககள் மட்டுமன்றி அல்லாஹ்தஆலாவை இம்சித்தும் கண்மணி ரஸூல் ( ஸல்)அவர்களை தூசித்தும் “புத்திக டயஸ்” என்பவன் ஒலிபெருக்கியை உபயோகித்து உரை நிகழ்த்தியதை சூழவுள்ள முஸ்லிம் ,முஸ்லிமல்லாத மககள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பலரின் முயற்சியினால் ஜனாதிபதியின் பனிப்பின் பேரில் சப்ரகமுவ முதலமைச்சர் ஊடாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் விசாரனை நடாத்தப்பட்டு தெவனகல குன்று சம்பந்தமான வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி மவனெல்லை நீதிமன்ரத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கில் ‘அனுர மஞ்சனாயக ‘ எனும் கலிகமுவ பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவனுக்கும் ” புத்திக டயஸ்” எனும் இனவாதக் கயவனுக்கும் எதிராக மாவனல்லை நீதிமன்றில் பொலீசாரினால் வழக்குத் தொடரப்பட்டு இவர்கள் இருவருக்கும் தெவனகலைக்குப் பிரவேசிப்பதும் தடை விதிக்கப்பட்டது.

அதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் மாவனல்லை உதுவன்கந்த பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்பி வரும் வழியில் ஜனாதிபதி அவர்கள வந்த வாகனத்தை மறைத்து சிங்கலராவய குழுவினரால் தெவனகல விடயம் சம்பந்தமான மகஜர் ஒன்ரை கையளித்திருந்தனார்.

கடந்த வியாழக்கிழமை 28ம் திகதி மாவனெல்லை நகர மத்தியில் பிக்குகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தன்ர். இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரயே அமித்த தம்ம,மாகல்கந்தே சுதத்த,ரத்னபுரே நந்தாலோக,மெதிரிகிரியே புண்யாஸார,அம்பத்தலாவே சங்கரத்ன, சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுதத்த,திரியாயே சீலரதன,மெதிரிகிரியே சுதத்த ஆகிய தேரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

kuragala2 copy

எமது செய்தியாளர் தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பின் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் குறுப்பிடட கருத்து:

சப்ரகமுவ மாகாணத்தின் பழைமை வாய்ந்த பௌத்த புனித பூமிகளில் தெவனகல குன்று கருதப்படுகின்றது. தற்போது அப் பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து இருகின்றனர். 2006 ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவினால் தெவனகல குன்றில்லிருந்து 400 மிட்டர் நிலப்பரப்பு தெவனகல புனித பூமி வலையமாக பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தொல்பொருளியல் திணைகளம் இந்த பூமியை பாதுகாக்க முன்வரவில்லை இதற்கு காரணம் பிரதேச அரசியல் வாதிகளின் அச்சுறுத்தல் ஆகும்.

தெவனகல குன்றுக்கு அண்மித்த பகுதியில் இறைச்சிக் கடை ஒன்றும் இருந்தது தற்பொழுது பௌத்த மக்களின் எதிர்ப்பினால் இறைச்சிக் கடை மூடப்பட்டுள்ளது. எமது புனித பூமியை எமக்கு மீட்டித் தரும் வரை போராட்டத்தை  தொடருவோம்.

எனக் குருப்பிட்டார்.

526496_506307162797223_361052583_n

உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் (28) மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தானர். மேலும் இப் பிரதேசத்தினை அளக்கும் வேளையை உடனடியாக அரம்பிப்பதற்கு கேகாலை நில அளவைத் திணைகளத்திற்கு 54400 ரூபாய் பணத்தினை ஒரு கிழமையிகுல் தொல்பொருளியல் திணைகளத்தினால் வழங்குவதாகவும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்கள் உறுதியளித்தானர்.

இதன் பின்னர் மாலை 5 மணியளவில் தெவனகலை புனித பூமியை பாதுகாக்கும் அமைப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.

New Picture (3)

1420517_624406434287286_602022975_n

 

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *