தெவனகல விடையம் தொடர்பாக அரநாயக்க பிரதேச சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்

அண்மையில் அரநாயக்க பிரதேச சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்ற மாதாந்த மகா சபை கூட்டத்தில் தெவனகல விடையம் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கள்..

கலிகமுவ பிரதேச சபை எதிர்கட்சி தலைவருக்கு நான் கூறுகின்றேன் கலிகமுவ பிரதேசத்தில் தொல்பொருள் இடங்கள் பல உள்ளன. அவற்றை காப்பாற்றிக்கொள்ளவும். தெவனகல விகாரை மாவனல்லை அரநாயக்க பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. முடியுமென்றால் அரநாயக்க பிரதேசத்துக்கு வந்து உண்ணாவிரதமொன்ரை செய்துகாட்டவும், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இந்த பொது பல சேனவோ சிங்கள ராவய அமைப்புக்களோ இருக்கவில்லை என அரநாயக்க பிரதேச சபை தலைவர் தினேஷ் குணரத்ன தெரிவித்தார்.download (53)

இதேவேளை அரநாயக்க பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்

” எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசத்தில் சமாதானத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ஏதாவது நடக்குமாயின் அதற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை முறையடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.”

மேலும் அக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரநாயக்க பிரதேச சபை உறுப்பினர் அஜன்த்த திசாநாயக்க அவர்கள்:

” நுகேகொட, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து இனவாதிகள் எமது ஊரிற்கு வந்து தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிற்க முற்படுகின்றனர். எனவே இது தொடர்பாக நாம் மிகவும் புத்தியுடன் நடந்துகொள்ள வேண்டும். ”

 

393397_132191610219553_58215961_n

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares