தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் பிரதான நடமாடும் சேவை ஸஹிரா கல்லூரியில்

தேசத்திற்கு மகுட நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நடமாடும் சேவை காலை மாவனல்லை ஸஹிரா தேசிய கல்லூரியில் நேற்று (28) நடை பெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களாக ரன்சித் சியம்பலாபிடிய, அதாவுத செனவிரத்ன, லலித் திசாநாயக மாவனல்லை பிரதேச சபை தலைவர் விக்ரமசிங்க அவர்களும் உப தலைவர் ஜளாப் காமில் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வருட தேசத்திற்கு மகுட தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் புத்தளம்,குருணாகல், மற்றும் கேகாலை மாவட்டங்களில் 57 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2731 கிராம அலுவலர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் இம்மாவட்டங்களில் வசிக்கின்ற 32 இலட்ச மக்கள் நன்மையடைகின்றனர்.

வருடாந்தம் நடாத்தப்படுகின்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சி 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு இனைவாக மேற்கொள்ளப்படுகின்ற மிக முக்கியமான பணியானது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி நிகழச்சித் திட்டமாகும், இதன் கீழ் வருடாந்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாவட்டத்தில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடாத்தப்படுவதோடு, குறித்த மாவட்டத்தினை மையமாக்க் கொண்டு பல மாவட்டங்களில் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சியினை நடைமுறைப்படுத்துவதற்கு அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் போது குறித்த மாவட்டங்களில் அனைத்து பௌதீக, அடிப்படை வசதிகள், சமூக அபிவிருத்தி மற்றும் ஏனைய சமூக அபிவிருத்தி மற்றும் ஏனைய அனைத்து பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேசத்திற்கு மகுட நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு விடயமாக 3 மாவட்டங்களிலும் தேசத்திற்கு மகுட நடமாடும் சேவைகள் 2731 நடாத்தப்படுவதோடு, கேகாலை மாவட்டத்தில 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 573 கிராம அலுவலர் பிரிவுகளில் இந்நடமாடும் சேவைகள் நடாத்தப்படுகின்றன. இதனூடாக ஆட்களைப் பதிவு செய்தல், பிறப்பு, இறப்பு,விவாக,முதியோர் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விண்ணப்ப்ப் படிவங்களை விநியோகித்தல், கிராமத்தில் பொது வசதிகள் சம்பந்தமாக களப் பரிசோதனை செய்தல், மருத்துவ  முகாம்களை நடாத்துதல், காணி மற்றும் ஏனைய அனுமதிப்பத்திரங்கள் சம்பந்தமான பிணக்குகளைத் தீர்த்தல் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன.

கேகாலை மாவட்டத்தில் 573 கிராம அலுவலர் பிரிவுகளில் நடமாடும் சேவைகள் 364 நடாத்தப்பட்டுள்ளதோடு, அதன்போது 121986 பிணக்குகள் அடையாளப்படுத்தப்பட்டு அச்சந்தர்ப்பத்திலேயே 14601 பிணக்குகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முன்வைக்கப்பட்ட பிணக்குகளில் 107385 இற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சுக்கள்,தணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

மாவனல்லை பிரதேச செயலக தலைவி பிரியங்கனி பெதன்கொடுவ அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்விலே அங்கவீனர்களுக்கான சக்கர நாட்காளியும் கதிரைகளும் வீட்டுக்கடன் உதவி காசோலைகள் மேலும் கைத்தொழில் உபகரணங்களும் வழங்கபட்டன.

download (1) download (2) download (3) download

1010484_748663535145047_1945419954_n 1014115_791442267536838_2018493140_n

1546141_777763875584570_1254915860_n

1622050_777763902251234_985653610_n (1)

1656423_777763835584574_119255081_n

1743505_777763898917901_849492947_n

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *